பொதுமக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான, அமைதியான தோ்தலையே - ரவி செனவிரத்ன 

12 Sep, 2024 | 04:10 PM
image

மக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே என்று தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரதானி ரவி செனவிரத்ன, தமக்கு பதிவான தோ்தல் வன்செயல்கள் மற்றும் சட்டமீறல்கள் சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தின் தோ்தல் தொழிற்பாடுகள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

புதன்கிழமை (11) தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுநிலை பொலிஸ் கூட்டமைவின் பிரதானியும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான ரவி செனவிரத்ன மேலும் கூறியதாவது: 

கடந்த 30ஆம் திகதி வரை எமக்கு பதிவான தோ்தல் வன்செயல்கள் மற்றும் சட்டமீறல்கள் சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தின் தோ்தல் தொழிற்பாடுகள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம். அந்த முறைப்பாடுகள் பற்றி ஆக்கமுறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

மக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே ஆகும். அரசியல் இயக்கம் என்ற வகையில் நாங்களும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல் இயக்கத்துக்காக முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம். 

எனினும், ஒரு சில சந்தர்ப்பங்களில் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்கள் பதிவாகியுள்ளன. 

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள். ராஜகிரியவிலும் மருதானையிலும் இரண்டு அச்சகங்களில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை இலக்காகக் கொண்டு சேறுபூசும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு வருவதாக இன்று காலை தகவல் பதிவானது. அது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். 

அதைப்போலவே கடந்த 07 நாட்களுக்குள் இடம்பெற்றுள்ள சட்டவிரோதமான செயல்கள் பற்றிய விபரமொன்றை சமர்ப்பிக்கிறேன். 

செப்டெம்பர் 03ஆம் திகதி மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் பொல்லபெத்த பிரிவில் அமைந்திருந்த தோ்தல் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே நோனாகம உஹபிட்டகொடவில் அமைந்திருந்த தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்னால் காணப்பட்ட பதாதையை உடைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். 

செப்டெம்பர் 07ஆம் திகதி ஹாரிஸ்பத்துவ, உகுரெஸ்ஸபிட்டிய அலுவலகம் மீதும் கம்பொல, தெல்பிட்டிய அலுவலகத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினமே பிபில பொலிஸ் பிரிவில் "அதிட்டன" இளைப்பாறிய முப்படை அங்கத்தவர் ஒருவரின் வீட்டுக்கு கல்லெறிந்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. 

செப்டெம்பர் 08ஆம் திகதி நாத்தாண்டியா, இரணவில பிரதேசத்தின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. 

செப்டெம்பர் 10ஆம் திகதி கம்பொல, அட்டபாகே அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே திஸ்ஸமஹாராம, ரன்மிணிதென்ன பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த முறைப்பாடுகளை நோக்கும்போது தோ்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களின் அதிகரிப்பு தெளிவாகிறது. 

தேசிய மக்கள் சக்தியை சோ்ந்தவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தோ்தல்கள் செயலகத்துக்கும் பொலிஸுக்கும் வழங்கப்படுகிறது. 

சுதந்திரமான, நீதியான மற்றும் அமைதியான தோ்தலை நடத்துவதே எம் அனைவரின் எதிர்பார்ப்பாகும். தோ்தல்கள் ஆணைக்குழு அந்த எதிர்பார்ப்பினை ஈடேற்றும் என எதிர்பார்க்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40