எம்மில் பலரும் கடுமையாக உழைப்பதற்கு எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
அதே தருணத்தில் கடுமையாக உழைப்பவர்களுக்கும் மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு.
இந்த நிலையில் பலருக்கும் கடுமையாக உழைத்தாலும் அவர்களால் எதிர்பார்த்த வெற்றியை தொட இயலாது.
இதற்கான காரணத்தை அவர்கள் சோதிட நிபுணர்கள் ,ஆன்மீக முன்னோர்கள்,இத்துறையின் வல்லுனர்கள் ,என பலரிடமும் பலவித கோணங்களில் விவாதித்திருப்பர்.
ஆனால் முழுமையான விடை கிடைத்திருக்காது. இந்நிலையில் நீங்கள் உங்களுடைய புதிய முயற்சிகளை எந்த தருணத்தில் தொடங்கலாம் என்பதனை எம்முடைய முன்னோர்கள் சூட்சமமாக முன்மொழிந்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக நட்சத்திரங்களையும், கிழமைகளையும் இணைத்து ஒரு நுட்பமான குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
இதனை நாம் உணர்ந்து பின்பற்றும் போது வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
நாம் அனைவரும் 27 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் தான் பிறந்திருப்போம். அதே தருணத்தில் வாரத்தில் இருக்கும் ஏழு கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையில் தான் பிறந்திருப்போம்.
இந்த இரண்டிற்கும் தனிப்பட்ட ஆற்றல் உள்ளது. இதனை துல்லியமாக அவதானித்து உங்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம்.
பரணி, பூரம் ,பூராடம் , ஆகிய சுக்ர பகவானின் மூன்று நட்சத்திரங்களில் நீங்கள் பிறந்திருந்தால் அதாவது இந்த மூன்று நட்சத்திரம் உங்களது ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் இந்த நட்சத்திரங்களும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் நாளில் நீங்கள் உங்களுடைய புதிய முயற்சியை தொடங்கினால் அதில் வெற்றியை பெறலாம்.
குறிப்பாக புதிய வாகனத்தை வாங்கும் போது இதனை பின்பற்றினால் லாபமும், மகிழ்ச்சியும் உறுதி.
ரோகினி ,ஹஸ்தம், திருவோணம் , ஆகிய சந்திர பகவானின் மூன்று நட்சத்திரங்கள் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், இந்த மூன்று நட்சத்திரங்களும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாளில் உங்களது புதிய முயற்சியை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
குறிப்பாக உணவு சம்பந்தமான உணவகங்கள், நீர் தொடர்பான குளிர்பான கடை தொடங்குவதற்கு இதனை பின்பற்றலாம் .
மேலும் இத்தகைய தொழிலை தொடங்கும் போது சமூகத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை சிறப்பு அதிதியாக பங்கு பெற்ற வைக்காமல் உங்களது தாயாரின் ஆசியுடன் இந்த தொழிலை தொடங்கினால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் ,சித்திரை, அவிட்டம் , என செவ்வாய் பகவானின் மூன்று நட்சத்திரங்கள் உங்களது ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் இந்த ஜென்ம நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் இணைந்து வரும் நாளில் தொழில் தொடர்பான புதிய முயற்சியை தொடங்கினால் வெற்றி கிடைக்கும் .
குறிப்பாக காணி, காலியான காணி, அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய நிலம் தொடர்பான தொழிலில் முதலீடு செய்வதற்கும், தொழிலை தொடங்குவதற்கும் பொருத்தமானது.
மேலும் சொத்து தொடர்பாக சகோதரர்களுடன் வழக்கு, சிக்கல் போன்றவை இருந்தாலும்... இந்த நட்சத்திரமும், கிழமையும் இணைந்த நாளில் பேச்சு வார்த்தையை தொடங்கினால் உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டு, சாதகமான பலன் கிட்டும்.
அத்துடன் மட்டும் இல்லாமல் நீங்கள் இந்த இணைவுகளில் வங்கிகளில் கடன் கோரிக்கையை விடுத்தாலும் அவையும் உங்களுக்கு சாதகமான பலனை தரும்.
திருவாதிரை ,சுவாதி , சதயம் என நிழல் கிரகமான ராகு பகவானின் மூன்று நட்சத்திரங்களும், செவ்வாய்க்கிழமையும் இணையும் நாளில் நிலம் தொடர்பான மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளை மேற்கொண்டால் வெற்றியை அள்ளித்தரும்.
ஆயில்யம், கேட்டை ,ரேவதி என புதன் பகவானின் மூன்று நட்சத்திரங்களும், புதன்கிழமையும் இணைந்து வரும் போது உங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தல், தனித்திறன் போதித்தல், உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.
அதே தருணத்தில் நீங்கள் புதிதாக ஒரு இணையதளத்தையோ அல்லது சமூக ஊடக வலைதள பக்கத்தையோ தொடங்க விரும்பினாலும் இந்த நாளை தெரிவு செய்து தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.
புனர்பூசம் ,விசாகம் ,பூரட்டாதி, ஆகிய குரு பகவானின் மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வந்தால், இந்த மூன்று நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திரமும் ,வியாழக்கிழமையும் இணைந்திருக்கும் நாளில் இறை வழிபாட்டை மேற்கொண்டால் அல்லது பரிகார வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுக்கு பரிபூரண பலன் கிடைக்கும்.
பூசம், அனுஷம் ,உத்திரட்டாதி என சனி பகவானின் மூன்று நட்சத்திரங்கள் உங்களது ஜென்ம நட்சத்திரம் இருந்தால் இந்த மூன்று நட்சத்திரங்களின் ஏதேனும் ஒரு நட்சத்திரமும், சனிக்கிழமை இணைந்து வரும் நாளில் நீங்கள் உங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இடத்தில் கனிவுடன் நடந்து கொண்டால் அவர்களால் ஏற்படப்போகும் நஷ்டத்தை தவிர்க்க இயலும். இந்த பிரத்யேக நாளில் தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டால் அவை நாளடைவில் உங்களது தொழிலில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, நஷ்டத்தை உண்டாக்கும் .
எனவே இந்த நாளில் இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அஸ்வினி ,மகம் ,மூலம் , என கேது பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திரம் உங்களது ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் இந்த நட்சத்திரமும், சனிக்கிழமை இணைந்து வரும் நாளில் நீங்கள் ஒருபோதும் உங்களது புதிய முயற்சியை தொடங்கக்கூடாது.
அதையும் கடந்து நீங்கள் தொடங்கினால் நாளடைவில் பணியாளர்களாலும் ,தொழிலாளர்களாலும் பிரச்சனையும் ,தாமதமும் ஏற்பட்டு நஷ்டத்தையும், அவமானத்தையும் உண்டாக்கும்.
கிருத்திகை ,உத்திரம் ,உத்திராடம் என சூரிய பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று உங்களது ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் அந்த ஜென்ம நட்சத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் இணைந்து வரும் நாளில் நீங்கள் ஒருபோதும் புதிய முயற்சியை தொடங்க கூடாது.
குறிப்பாக அரசாங்கத்தின் அனுமதி தொடர்பாக விடுமுறையில் இருக்கும் அரசு அலுவலர்களையோ அதிகாரிகளையோ இந்த பிரத்யேக நாளில் சந்திப்பதை தவிர்ப்பது தான் நலம். அதையும் கடந்து சந்தித்தால் சோதனையும், நஷ்டமும் உண்டாகும்.
மேலே சொன்ன 27 நட்சத்திரங்களும் ஏழு கிழமைகளும் இணைந்த நாளில் உங்களுக்கான புதிய முயற்சியை தொடங்குவதோ அல்லது புதிய முயற்சியை தொடங்காமல் தள்ளி வைப்பதையும் அறிந்து கொண்டால் உங்களுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM