மனித உரிமை மீறல்கள் ,ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்ட்டோ பியுஜிமோரி (86) காலமானார்
1990 முதல் 2000 ம் ஆண்டுவரை பெருவின் ஜனாதிபதியாக பதவி வகித்த பியுஜிமோரி ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவியை இராஜினாமா செய்தார்.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இடது சாரி கெரில்லாக்களிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த பியுஜிமோரிக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நாட்டிலிருந்து தப்பியோடிய பியுஜிமோரி பின்னர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் அதன் பின்னர் சிறைதண்டனையை அனுபவித்தார்
25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 வருட சிறைவாழ்க்கையின் பின்னர் பியுஜிமோரி கடந்த வருடம் விடுதலைசெய்யப்பட்டார்.
புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்தார் என அவரது மகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM