இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு உள்வாரி முதலீட்டு கணக்குகளை ஆரம்பிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் 

Published By: Digital Desk 7

12 Sep, 2024 | 01:02 PM
image

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (கொ.ப.ப.) மற்றும் DFCC வங்கி பிஎல்சி (DFCC) ஆகியன இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு (FIs) உள்வாரி முதலீட்டு கணக்குகள் (IIAs)  ஆரம்பிப்பதற்கு வசதியளிப்பினை மேம்படுத்தும் நோக்கில் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டன. 

இந்த கூட்டுமுயற்சியானது கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் மொபைல் செயலியினூடாக மத்திய வைப்புத் திட்டக் (CDS) கணக்குகளை ஆரம்பிக்கும்போது வெளிநாட்டு தனிநபர்கள் உள்வாரி முதலீட்டு கணக்குகளை ஆரம்பிக்கும் தேவையினை இயலுமையாக்கும்.

ஒரு வினைத்திறனான மற்றும் இணக்கப்பாடான கணக்கு ஆரம்பிக்கப்படுவதனை உறுதிசெய்வதற்காக அவசியமான விண்ணப்பத் தகவல்கள் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் DFCC வங்கி இடையே பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த பங்குடைமையானது, முதலீட்டு செயன்முறையினை எளிமையாக்குவதற்கு முனைவதுடன் ஒரு பரந்த அளவிலான சர்வதேச முதலீட்டாளர்களை கவர்வதன் மூலம் இலங்கையின் மூலதனச் சந்தைகளை பலப்படுத்துவதற்கும் முனைகின்றது. 

இந்த முன்னெடுப்பின்போது கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ரஜீவ பண்டாரநாயக்க பின்வருமாறு கூறினார்,

“இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது வெளிநாடுகளில் வசிக்கும் முதலீட்டாளர்கள் எமது மூலதனச் சந்தையினை அணுகுவதற்கு மிகவும் வசதியளிக்கும் விதமாக உள்வாரி முதலீட்டு கணக்குகளை பெறுவதற்கான செயன்முறையினை தெளிவாக்குவதற்கு அனுமதிக்கின்றது.

பிராந்திய ரீதியாக சந்தையானது தற்போது குறை மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பினை வழங்குகின்றது. எமது குறை பெறுமதியிடல்கள் மற்றும் திடமான எதிர்கால இலாபங்களுக்கான சாத்தியத்தினை பயன்படுத்துவதன் மூலம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் மொபைல் செயலியினூடாக ஒரு வினைத்திறனான கணக்கு திறத்தல் செயன்முறையினூடாக இலங்கையின் சந்தைக்கு அதிக முதலீட்டாளர்களை கவர்வதற்கும் நாம் எண்ணியுள்ளோம்.” 

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி,  திமால் பெரேரா கூறுகையில்,

“ டிஜிட்டல் இயலுமையினை மேம்படுத்துவதற்கான மற்றும் 100ம% தாள்களற்ற செயன்முறைகளை அடைவதற்கான எமது கடப்பாட்டுக்கு ஏற்றாற்போல், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையுடனான பங்குடைமையினூடாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உள்வாரி முதலீட்டு கணக்கினை அணுகுவதற்கான ஒரு தடையற்ற பாதையினை தற்போது வழங்கக்கூடியமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்த முன்னெடுப்பானது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமது முதலீட்டு சந்தைகளுக்கான அணுக்கத்தை பெறுவதற்கான செயன்முறையினை மேலும் எளிமையாக்கி டிஜிட்டல் மயமாக்குகின்றது. டிஜிட்டல் வங்கியலில் ஒரு முதல்வராகவும் இலங்கையில் மிகவும் நம்பிக்கையுள்ள வங்கிகளுள் ஒன்றாக, 70 வருடங்கள் பரந்த மரபுவழியுடன், இந்த சாதனையானது எமக்கு ஒரு பெருமையான தருணமாகும். இது எமது நாட்டிற்கு நன்மை பயக்கும் புதிய கூட்டுச்செயல்பாடுகளை உருவாக்கும் மூலோபாய பங்குடைமைகளில் ஈடுபடுவதற்கான எமது விருப்பத்தினை வெளிப்படுத்துகின்றது.”

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024 ‘ஹஜ் - உம்றா’ பயணத்தில்...

2024-09-12 19:54:27
news-image

இலங்கையில் குடியிராத வெளிநாட்டு தனிநபர்களுக்கு உள்வாரி...

2024-09-12 13:02:54
news-image

தனியார் துறையில் புத்தாக்க நிதியளித்தல் தீர்வுகள்...

2024-09-12 13:21:44
news-image

மாற்று முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த மட்டக்களப்பில்...

2024-09-12 13:15:45
news-image

குளியாப்பிட்டியாவில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை...

2024-09-11 17:16:20
news-image

சவாலான கால நிலைகளிலிருந்து உங்கள் வீட்டை...

2024-09-10 15:55:46
news-image

3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பதிவுகளுடன்...

2024-09-10 12:23:12
news-image

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த்...

2024-09-09 20:40:22
news-image

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ரணில் வில்லத்தரகே...

2024-09-09 19:39:28
news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54