இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமானது ((UNDP) கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (கொ.ப.ப.), இலங்கை வர்த்தகச் சம்மேளனம் (CCC) ஐக்கிய நாடுகள் உலகளாவிய சிறிய வலையமைப்பு இலங்கை (CNSL) மற்றும் ஆசியா மற்றும் பசிபிக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து கொழும்பில் தனியார் துறைக்கான நிலைபேறுடைய நிதியளித்தல் வாரத்தின் ஒரு பாகமாக இரண்டு நாள் செயலமர்வினை சமீபத்தில் முன்னெடுத்தது.
இந்நிகழ்வானது இலங்கையிலுள்ள வணிகங்களது மூலோபாயக் கட்டமைப்பினுள் நிலைபேறுடமையினை ஒருங்கிணைப்பதற்கான அவசியத் தேவையினை விளித்துரைப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இலங்கையின் UNDP இன் வதிவிடப் பிரதிநிதியான அசூசா குபோட்டா கருத்துத் தெரிவிக்கையில்,
நிலைபேறுடைய நிதியளித்தலின் உருமாற்றல் ஆற்றலினை வலியுறுத்தி பின்வருமாறு குறிப்பிட்டார், “இந்தச் செயலமர்வானது பொருளாதார சுபீட்சம் நிலைபேறுடமையுடன் தடையின்றி இணையும் எமது பொருளாதாரங்களது மீளெண்ணம் பற்றியதாகும்.
வணிகச் சூழலானது, காலநிலை மாற்றம், வளங்களது வரையறைகள் மற்றும் மாற்றமடையும் சமூக விழுமியங்களது செல்வாக்கின் கீழ் வெளிப்படும்போது வணிக மூலோபாயங்களினுள் நிலைபேறுடமையினை ஒருங்கிணைத்தல் தவிர்க்க முடியாததாகும்.” என்றார்.
இந்நிகழ்வானது நாளாந்த செயற்பாடுகளில் நிலைபேறுடமையானது பதிக்கப்படுவதன் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டியது. இது இலங்கையின் கம்பனிகள் நெறிமுறையான நுகர்வோரை கவர்வதற்கும், அவற்றின் வணிகநாம படிமத்தினை மேம்படுத்துவதற்கும், வெளித்தோன்றும் ஒழுங்குவிதிகளுடன் இணக்கப்பாடு காண்பதற்கும் மற்றும் நிலைபேறுடைய முதலீட்டு வாய்ப்புக்களை அணுகுவதற்கும் வசதியளிக்கும்.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் வணிக பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவர் புண்ணியமாலி சபரமாது கருத்துத் தெரிவிக்கையில்,
சூழல், சமூக மற்றும் ஆளுகை கட்டமைப்பில் (ESG) கொள்திறன் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும்போது இவ்வாறு கூறினார், “பசுமை முறிகளின் வணிகமயமாக்கலை நாம் ஆராயும்போது, நாம் கம்பனிகளிடையே கணிசமான ஆர்வத்தினை இனங்கண்டுள்ளோம்.
இருப்பினும் பலர் இதனை நிறைவேற்றுவதில் தெளிவின்றி காணப்படுகின்றார்கள். இது இப்பிரிவில் கொள்திறன் கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவையினை சுட்டிக்காட்டுகின்றது. திடமான சூழல், சமூக மற்றும் ஆளுகை கட்டமைப்புகளுடனான கம்பனிகள் அவற்றின் நற்பெயரினை வலுவூட்டுவது மாத்திரமன்றி நீண்டகாலத்தில் வினைத்திறனாக இடர்களை தணித்து அவற்றின் மூலதனக் கிரயத்தினையும் குறைப்பது மிகவும் தெளிவாகின்றது.” என்றார்.
இரண்டு நாள் செயலமர்வின்போது, ஏற்பாட்டுக் குழுவிலிருந்து நிபுணர்கள் நிலைபேறுடைய நடைமுறைகளை புரிந்துகொள்வதில் மற்றும் அமுலாக்குவதில் தனியார் துறையின் கொள்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொடரான ஊடாட்டக் கலந்துரையாடல்களை வழிநடத்தினார்கள். பங்குபற்றுனர்கள் நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளுடன் சீரமைத்தலானது எவ்வாறு கணிசமான வணிக வாய்ப்புக்களைத் திறக்கும் என்பதில் மதிப்புமிக்க நுண்ணறிவினை பெற்றார்கள்.
அவர்களுக்கு நிலைபேறுடைய நிதியளித்தல் தொடர்பான முக்கிய நியதிகள் மற்றும் எண்ணக்கருக்களை தெளிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் வணிக மாதிரிகள் மற்றும் முதலீட்டுத் தேக்கங்களினுள் நிலைபேறுடமையினை ஒருங்கிணைப்பதில் நடைமுறை ஆலோசனையும் வழங்கப்பட்டது - இவை இலங்கையின் வணிகங்களுக்கு பொருத்தமான நேர்வு ஆய்வுகளையும் உள்ளடக்கியிருந்தன.
நிலைபேறுடைய கடப்பாடுகளை நடைமுறைப்படுத்தக்கூடிய மூலோபாயங்களாக மாற்றுவதற்கான அவசரத்தினை வற்புறுத்தும்போது, ஐக்கிய நாடுகள் உலகளாவிய சிறிய வலையமைப்பு இலங்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரதிக டி சில்வா கூறுகையில்,
“நிலைபேறுடமை என்பது ஒரு புதிர்ச்சொல் அல்ல – அது ஒரு தவிர்க்கவியலாத வணிகமாகும். நாம் எமது பொருளாதாரத்திற்கு அவசரமாக தேவைப்படும் நிதி உட்புகுத்தும் ஒரு முக்கியமான தருணத்தில் உள்ளோம். தற்போது, நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளில் 15 வீதத்தினை மாத்திரமே நாம் அடைந்துள்ளதுடன் இன்னும் 85மூ இனை அடையவேண்டியுள்ளது. வெறுமனே 6 அல்லது 7 வருடங்கள் எஞ்சியிருக்கும்போது, செயற்படுவதற்கான அவசரமானது முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகமாகக் காணப்படுகின்றது. என்றார்.
மேலும், இந்நிகழ்வானது பசுமை முறிகள், கூட்டாண்மை முறிகளது வழங்கல் மற்றும் நிலைபேறுடைய வெளிப்படுத்தல்கள் போன்ற நிலைபேறுடைய நிதியளித்தல் தெரிவுகளையும் உள்ளடக்கியிருந்தது. பங்குபற்றுனர்கள் சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) கட்டமைப்புகள் மற்றும் தாக்க அளவீடு மற்றும் முகாமைத்துவத்தில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தினையும் பெற்றதுடன் அவர்களது செயற்பாடுகள் மற்றும் அறிக்கையிடுவதில் இவற்றை எவ்வாறு ஒருங்கிணைப்பது பற்றியும் அறிந்துகொண்டார்கள்.
இச்செயலமர்வானது வலையிணைப்பு மற்றும் பங்குடைமைகளை வளர்த்ததுடன், பங்குபற்றுனர்களிடையே இணைப்புகளை கட்டியெழுப்புவதற்கும், கூட்டுமுயற்சிகளை ஆராய்வதற்கும் நிலைபேறுடைய முன்னெடுப்புகளில் அறிவினை பகிர்ந்துகொள்வதற்கும் வசதியளித்தது.
இலங்கை வர்த்தகச் சம்மேளனத்தின் சார்பில் உரையாற்றும்போது, அதன் பிரதம பொருளியலாளர், சஞ்சய ஆரியவன்ச கூறுகையில்,
“நிலைபேறுடைய வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு இலங்கை அளவற்ற சாத்தியத்தினை கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சாத்தியத்தினை அடைவதில் பல சவால்கள் காணப்படுகின்றன.
பொருளாதார வளர்சிக்கான விசைப்பொறியாக தனியார் துறையானது இந்த சாத்தியத்தினை திறப்பதற்கான திறவுகோலினைக் கொண்டுள்ளது. வணிகங்கள் அவற்றின் சூழல் மற்றும் சமூக தாக்கங்களை அளவீடு செய்வதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் அவற்றிற்கு நாம் வலுவளிக்கும்வேளை வளர்ச்சியடையும் நிலைபேறுடைய நிதியளித்தல் தேக்கத்திற்கான அணுகலையும் வழங்குதல் வேண்டும்.” என்றார்.
நிலைபேறுடைய நிதியளித்தல் வாரமானது, தனியார் துறை, ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகள், ஐக்கிய நாடுகள் உலகளாவிய சிறிய மற்றும் நிதியளித்தல் நிறுவனங்கள் என்பவற்றுக்கிடையே தொடர்ச்சியான கூட்டுமுயற்சி மற்றும் பங்குடைமைக்கான அழைப்புடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வானது நீண்டகால ஈடுபாடு மற்றும் அறிவினைப் பகிர்தல், நிலைபேறுடமை நோக்கிய செயலூக்கமான நடவடிக்கைகளை வணிகங்கள் மேற்கொள்வதனை ஊக்கமளித்தல் என்பவற்றுக்கான அடித்தளத்தினை இட்டது. இலங்கை அதன் நிலைபேறுடைய நிதியளித்தல் நிலத்தோற்றத்தினை விருத்திசெய்வதனை தொடரும்வேளை இவ்வாரத்தின் விளைவானது நாட்டின் வணிகங்களது எதிர்காலத்தினை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM