மலேசியாவின் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் மோசமான துஸ்பிரயோகங்கள் - 402 சிறுவர்கள் மீட்பு

Published By: Rajeeban

12 Sep, 2024 | 12:02 PM
image

மலேசியாவின் 20 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உடல்ரீதியாக பாலியல்ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என கருதப்படும் 402 சிறுவர்களையும் பதின்மவயதினரையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஒரு வயது முதல் 17 வயதானவர்களை மீட்டுள்ளோம் இவர்கள் பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மத ஆசிரியர்கள் உட்பட 171 பேரை கைதுசெய்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பிரபலமான இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது எனினும் அந்த அமைப்பு தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது.

நெகேரிசெம்பிலான் மாநிலத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெறுவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து செலெங்கூர் நெகெரி செம்பிலானில் உள்ள 20க்கும் மேற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்களை முன்னெடுத்திருந்தனர்.

17 முதல் 64 வயதான சந்தேகநபர்கள் சிறுவர்களை பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தினார்கள் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் "சூடான உலோகப் பொருட்களைப் பயன்படுத்தி தண்டிக்கப்பட்டனர்" என்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவர்களின் நிலை மோசமாகும் வரை மருத்துவ சிகிச்சையைப் பெற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு காவல் மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் .

பல குழந்தைகளை மதக்கல்விக்காக பெற்றோர் இந்த நிலையங்களிற்கு அனுப்பியிருந்தமை தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூன்று பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது...

2025-01-19 21:59:30
news-image

காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில்...

2025-01-19 20:04:25
news-image

உத்தரப் பிரதேசகும்பமேளாவில் தீ விபத்து

2025-01-19 19:13:00
news-image

ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யவுள்ளவர்களின் விபரங்கள்...

2025-01-19 16:52:36
news-image

காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது!

2025-01-19 16:35:17
news-image

நைஜீரியாவில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வெடித்து...

2025-01-19 14:00:06
news-image

விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ்...

2025-01-19 11:50:57
news-image

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும்...

2025-01-19 11:40:35
news-image

உக்ரைன் ஜனாதிபதி பிரிட்டிஸ் பிரதமர் பேச்சுவார்த்தை...

2025-01-19 11:14:57
news-image

பெண் மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய்...

2025-01-19 08:48:30
news-image

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே...

2025-01-18 21:14:01
news-image

ஈரானில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-18 16:35:56