கொழும்பு பங்குப்பரிவர்த்தனையானது (CSE), 2024, செப்டெம்பர் 8 ஆம் திகதி காத்தான்குடியில் உள்ள பீச்வே ஹோட்டலில் முதலீட்டாளர் மன்றமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இப்பிராந்தியத்திலுள்ள முதலீட்டாளர்களுக்கு மாற்று முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துதல், சந்தை பற்றிய நுணுக்கமான அறிவை வழங்குதல் போன்றவற்றை இம்மன்றம் நோக்கமாக கொண்டிருந்தது.
மன்றம் 75 பங்கேற்பாளர்களை ஈர்த்ததுடன், சுகுக்ஸ், பசுமை மற்றும் நிலையான முறிகள் போன்ற கடன்சார் முதலீட்டு பிணையங்கள், பங்கு கடன் பெறுதல் மற்றும் கடன் வழங்குதல் தொடர்பாக பிராந்தியத்தில் உள்ள சாத்தியமான மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கு பெறுமதிமிக்க நுண்ணறிவை வழங்கியது.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் சிவானந்தன் ராமன் முத்துக்கிருஷ்ணன், புதிய முதலீட்டு வழிகளை ஆராய்வதன் முக்கியத்துவம் குறித்த கருத்துரைகளுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மன்றத்தின் முதல் முன்னிலைப்படுத்துகையினை நிகழ்த்திய, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் தரகர் மேற்பார்வை மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவன உடன்பாட்டிற்கான சிரேஷ்ட துணைத் தலைவர் நிலுபா பெரேரா, பங்கேற்பாளர்களுக்கு பசுமை மற்றும் நிலைத்தன்மை பத்திர வெளியீடுகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதில் இப்பத்திரங்களின் பங்கு மற்றும் முதலீட்டாளர்களுக்கு அவற்றின் மூலமான சாத்தியமான நன்மைகள் குறித்து அவர் கவனம் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வரையறுக்கப்பட்ட அல்மாஸ் ஈக்விட்டிஸ் (தனியார்) நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் ஷரியா ஆலோசனைகளுக்கான முகாமையாளர் யஹ்யா இல்ஹாம் நிசாம்டீன் அவர்கள் இலங்கையில் ஷரியாவுடன் இணங்கிச்செல்லக்கூடிய கடன் பத்திரங்கள் குறித்து மன்றத்தில் உரையாற்றினார்.
அவரது அமர்வானது, ஷரியாவுடன் இணங்கிச்செல்லும் முதலீட்டுத் தெரிவுகளில் அதிகரித்துவரும் முக்கியத்துவம் மற்றும் அதற்கமைவான வாய்ப்புகள் குறித்த சிறப்பான விளக்கத்தை வழங்கியது.
ஆஷா செக்யூரிட்டீஸ் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின், ஆராய்ச்சிக்கான துணைத் தலைவர் அருமைநாயகம் விசாகன், பங்குக் கடன் பெறுதல், கடன் வழங்குதல் மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட குறை விற்பனை ஆகியவை குறித்து விளக்கமளித்தார். அவரது முன்னிலைப்படுத்துகையானது, மேம்பட்ட நிதி உத்திகளையம், அவற்றின் நடைமுறை பயன்பாடுகளையும் உள்ளடக்கிய பெறுமதிமிக்க தகவல்களை வழங்கியது.
ஒரு ஊடாடும் குழு விவாதம் மற்றும் கேள்வி பதில் அமர்வுடன் மன்றம் முடிவடைந்தது. இக்குழுவில் நிலூபா பெரேரா, யஹ்யா இல்ஹாம் நிசாம்டீன் மற்றும் அருமைநாயகம் விசாகன் ஆகியோர் உள்ளடங்கியிருந்ததுடன், சிவானந்தன் ராமன் முத்துக்கிருஷ்ணன் இக்குழுவை நெறியாழ்கை செய்தார். இவ்வமர்வு பங்கேற்பாளர்களின் பங்குச்சந்தை தொடர்பிலான சந்தேகங்களைத் தெளிவுபடுத்தியதுடன், துறைசார் வல்லுனர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM