ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் முயற்சிகளின் உலகளாவிய ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 2024 ஆகஸ்ட் 28 அன்று பேங்கொக்கில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பயண சங்கத்தின் (PATA ) தங்க விருதுகள் 2024 இல் “மார்க்கெட்டிங்-கெரியர்” பிரிவில் தங்க விருதை தனதாக்கிக்கொண்டது.
மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம் ‟ (Colourse of jaffna) பிரச்சார திட்டமானது, நாட்டின் துடிப்பான வடபகுதியை பிரத்தியேகமாக கவனத்திற் கொண்ட, எந்தவொரு இலங்கை நிறுவனமும் இதுவரையில் மேற்கொண்டிராத இந்த வகையிலான முதலாவது சந்தைப்படுத்தல் பிரச்சாரமாகும்.
அண்மையில் CNN இனால் ஆசியாவின் மிகக் குறைவாக தரப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி பிரச்சாரமானது காலத்திற்கு ஏற்ற நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ஆசிய பசிபிக் பயண சங்கம் (PATA ) இந்த ஆண்டு, உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 24 பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவித்ததுடன் 23 கைத்தொழில் துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழுவினால் தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வெற்றிகரமான பிரச்சாரங்களில் ஒன்றான மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம் ‟ (Colourse of jaffna) பிரச்சாரத் திட்டமானது சமூக ஊடக தளங்களில் 500,000 க்கும் மேற்பட்ட ஈடுபாடுகளுடன் 14,000,000 க்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமிந்த பெரேரா கூறுகையில்,
“முகாமைத்துவம், எங்களின் மதிப்புமிக்க பங்காளர்கள் மற்றும் எனது குழுவினர் எமக்கு வழங்கிய ஊக்குவிப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்க நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறேன் உண்மையில் அவர்கள் இல்லாமல் இந்த அடைவு சாத்தியமாகியிருக்காது. காலத்திற்கு காலம் எமது இலங்கைத் தேசத்தை புதுமையான கண்ணோட்டத்தில் முன்வைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம், மேலும் எங்கள் முயற்சிகள் தொழில்துறையினராலும் பயணிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம் ‟ (Colourse of jaffna) என்ற இந்த பிரச்சாரத் திட்டத்திற்கு வளம் சேர்க்கும் வகையில், காட்சிகள் - படங்கள் மற்றும் காணொளி இரண்டும் – யாழ்ப்பாணத்தின் புகழை மனதிற்கினிய வகையில் எடுத்துரைப்பதாயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் கடற் கரைகள் மற்றும் வரலாற்று புகழ்வாய்ந்த யாழ் கோட்டை முதல் வண்ணமயமான கோயில் உட்புற அலங்காரங்கள், விழாக்கள் மற்றும் உணவு வகைகள் வரை, காட்சித் தொனியானது யாழ் நகரின் புதுமை, உற்சாகம் மற்றும் விறுவிறுப்பு ஆகியவற்றுடன் மாறுபட்ட அதேசமயம் குறிப்பிடத்தக்க அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்த காணொளியானது நகரத்தின் இயற்கையான எழுச்சி மற்றும் ஓட்டத்தை பிரதிபலிக்கும் விறுவிறுப்புகளுடன் சேர்த்து அதன் விழாக்களின் அமைதி மற்றும் துடிப்பான தன்மைக்கு இடையே உள்ள சிறந்த வேறுபாடுகளுடன் ஒரு தாளகதியோடு மெருகூட்டப்பட்டுள்ளது.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை முழுமைப்படுத்தும் வகையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஓய்வு மற்றும் பொழுது போக்குப் பிரிவான ஸ்ரீலங்கன் ஹோலிடேஸ் அதன் பிரத்தியேக உபசரிப்புப் பங்காளரான ஜெட்விங் ஹோட்டல்ஸுடன் இணைந்து, யாழ்ப்பாணத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் விடுமுறைப் பொதிகளை அறிமுகப்படுத்தியது. ஜெட்விங் ஹோட்டல்ஸ் நிறுவனமும் இலங்கையிலிருந்து மதிப்புமிக்க “காலநிலை மாற்ற முன்முயற்சி " பிரிவில் ஆசிய பசிபிக் பயண சங்கத்தினால் (PATA) விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மற்றுமொரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
'மனதை ஈர்க்கும் யாழ்ப்பாணம் ” (Colours of Jaffna ) என்ற இந்த பிரச்சாரத் திட்டத்தை பார்வையிடுவதற்கு https://www.facebook.com/share/v/2sgJXsXDTjqWPEre/ என்ற இணையத்தளத்திற்கு செல்லவும் அல்லது பின்வரும் கியூஆர் குறியிட்டினை ஸ்கேன் செய்யவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM