பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ; சாரதி போதைப்பொருளுடன் கைது

12 Sep, 2024 | 12:02 PM
image

களுத்துறை, அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். 

களுத்துறை, பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் சிலர் நிறுத்த முயன்ற போது முச்சக்கரவண்டியின்  சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி தொடர்ந்து முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இந்த முச்சக்கரவண்டியை துரத்திச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 10,050 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது! - பாரதி...

2025-02-13 14:12:46
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31