தேர்தல் பிரசாரம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 07 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த காணொளியில் காணப்படுபவர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, இந்த காணொளியில் ஒலிபரப்பப்பட்டுள்ள குரல் யாருடையது என்பதை உறுதிப்படுத்துவதற்கு காணொளியின் பிரதி, அரச பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் காணொளி குறித்து பல்வேறு அமைப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கணினி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM