கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, கலவரம் : பொலிஸ் குவிப்பு

12 Sep, 2024 | 10:35 AM
image

மாண்டியா: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாண்டியாவின் நாகமங்கல நகர்ப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதிக்கு உட்பட்ட பதரிகொப்பாலு பகுதியில் விநாயகர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது பிரதான சாலையை ஊர்வலம் கடந்து சென்றபோது ஊர்வலத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வைத்துவிட்டு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். சிலர் அருகிலிருந்த கடைகளுக்கு தீ வைத்தும், டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றும் மோதல் பெரிதானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை பதற்றம் நிறைந்ததாக போலீஸார் அறிவித்தனர். அப்பகுதியில் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டம் 163 பிரிவின் கீழ் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00