2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (12) நிறைவடையவுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாக்களிக்க நேற்று புதன்கிழமையும் (11) இன்றும் வியாழக்கிழமையும் (12) மேலதிக நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியும்.
எவ்வாறாயினும், தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த எந்தவொரு அரசாங்க ஊழியர்களும் இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் இதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், 10 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM