ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு சார்பாக அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை , மயுரபுர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவுக்கு சார்பாக அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கல்லெறிந்துள்ளனர்.
இதன்போது, அக்கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் சசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிலையில் இந்த தாக்குதலையடுத்து அவர்கள் மூவரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM