(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றிய இலங்கை ஏ அணி, உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் தொடரையும் வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
கிம்பர்லி டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று முடிவடைந்த முதலாவது உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா ஏ அணியை 6 விக்கெட்களால் இலங்கை ஏ அணி வெற்றிகொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் ஓஷத பெர்னாண்டோ குவித்த சதம், அணித் தலைவர் பசிந்து சூரியபண்டார பெற்ற அரைச் சதம், இசித்த விஜேசுந்தர பதிவுசெய்த 7 விக்கெட் குவியல் என்பன இலங்கை ஏ அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா ஏ அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 372 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் மெத்யூ ப்ரீட்ஸ்கே 129 ஓட்டங்களையும் மார்க்ஸ் அக்கர்மன் 69 ஒட்டங்களையம் ஷெப்பாங் டிதோல் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் இசித்த விஜேசுந்தர 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 98 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 323 ஓட்டங்களைப் பெற்று 49 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது.
ஆரம் வீரர் ஒஷத பெர்னாண்டோ 122 ஓட்டங்களையும் பசிந்து சூரியபண்டார 61 ஓட்டங்களையும் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 153 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் பெயர்ஸ் ஸ்வான்போல் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பிரநீலன் சுப்ராயன் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா ஏ அணி சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பின்வரிசை வீரர் பெயர்ஸ் ஸ்வான்போல் மாத்திரம் திறமையை வெளிப்படுத்தி ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் இசித்த விஜேசுந்தர 34 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, உரிய இலக்கை 4 விக்கெட்களை இழந்து பெற்று வெற்றியீட்டியது.
முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஓஷத பெர்னாண்டோ 80 ஓட்டங்களைப் பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM