எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

11 Sep, 2024 | 06:04 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கொலம்போ பிரண்ட் ‍இன் நீட் சொசயிட்டி (Colombo Friend - in- Need Society) மற்றும் எய்ட்எக்ஸ் (Aidex) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த எய்ட்எக்ஸ் விளையாட்டு விழா (AIDEX SPORTS FESTIVAL) கொழும்பு - 02இல் அமைந்துள்ள  ரைபில் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற 32ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் வில்வித்தை, சக்கர இருக்கை போட்டிகள், சைக்கிளோட்டம், தடகள போட்டிகள் உட்பட 64 போட்டி நிகழ்வுகளில் 350க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில்  சிவில் தரப்பினர், படைத்தரப்பினர் என 2 பிரிவுகளுக்கு வெவ்வேறாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துடன், இப்போட்டிகள் ஆண், பெண் என இருபாலாருக்குமான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் இளம் வயது ‍போட்டியாளராக 6 வயதுடைய போட்டியாளர் ஒருவரும் அதிகூடிய வயதுமிக்க ‍போட்டியாளராக 88 வயதுடைய  போட்டியாளர் ஒருவரும் பங்கேற்றிருந்தமை இப்போட்டி விழாவின்  சிறப்பம்சமாகும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த பராலிம்பிக்கில் நவீத் ரஹீம் இலங்கை சார்பாக பங்கேற்றிருந்தார்.  இவர் ஆண்களுக்கான S9 பிரிவு 400 மீற்றர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 10ஆவது இடத்தை பிடித்திருந்தார். இவர் கொலம்போ பிரண்ட்  இன் நீட் சொசயிட்டி அமைப்பு மற்றும் எய்ட்எக்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் தனது விளையாட்டுத்துறை ஆற்றல்களை மேம்படுத்தியவர் ஆவார். 

அத்துடன் தேசிய பார குழுவில் அங்கம் வகிக்கும் சுபானி உதேஷிகாவும் எய்ட் எக்ஸ் இன் உதவியுடன் உலக பரா  சம்பியன்ஷிப், ஆசிய பசுபிக் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்றவர் ஆவார். 

கொலம்போ பிரண்ட் ‍இன் நீட் சொசயிட்டி ( Colombo Friend - in- Need Society) மற்றும் எய்டெக்ஸ் அமைப்புகளானது சமூகத்தில் உடல் அங்கவீனமுற்ற பாதிப்புக்குள்ளாகி உள்ளவர்களுக்கு  செயற்கை உறுப்புகளை உற்பத்தி செய்து, வழங்கி வருகின்ற அமைப்பாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10