எம்மில் சிலருக்கு இளம் வயதிலேயே அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்திருப்பார்கள் அவர்களுக்கு கர்ம காரியம் செய்ய வேண்டிய சூழல் உண்டாகி இருக்கும்.
வேறு சிலருக்கு அரசாங்க பணியில் உயர் பதவியில் பணியாற்றிக் கொண்டிருப்பர். ஆனால் திடீரென்று காரண காரியம் ஏதும் இல்லாமல் பணியில் இருந்து ஓய்வு பெறுவர்.
வேறு சிலருக்கு அரசாங்கப் பணியில் இருந்தாலும் அதனை ராஜினாமா செய்துவிட்டு, சொந்தமாக தொழில் தொடங்கி அதில் நஷ்டத்தை சந்தித்து வாழ்க்கையை சிக்கலாகி கொள்வர்.
இவர்களது ஜாதகத்தை துல்லியமாக அவதானிக்கும் போது இவர்கள் அனைவரும் கண்டந்திர நட்சத்திர தோஷத்தையும் , சாபத்தையும் பெற்றிருப்பார்கள்.
கண்டாந்திர நட்சத்திர தோஷம் அல்லது சாபம் என்பது கேது பகவானின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் முதல் பாதத்தில் ஏதேனும் கிரகம் இருந்தாலோ அல்லது புதன் பகவானின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதத்தில் ஏதேனும் கிரகம் இருந்தாலோ அவர்கள் கண்டாந்திர நட்சத்திர சாபம் பெற்றவர்கள் என பொருள் கொள்ளலாம்.
கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி முதல் பாதத்தில் கிரகங்கள் இருந்தால் அதிலும் அசுப கிரகங்கள் இருந்தால் நீங்கள் தெய்வ சாபம் அல்லது தேவர்களின் சாபத்தை பெற்றவர்கள் என்றும், கேதுவின் இரண்டாம் நட்சத்திரமான மக நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் கிரகங்கள் இருந்தால் அதிலும் அசுப கிரகங்கள் இருந்தால் பித்ரு சாபம் பெற்றவர்கள் என்றும், கேதுவின் மூன்றாவது நட்சத்திரமான மூல நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் கிரகங்கள் இருந்தால் குரு சாபம் அல்லது குருமார்களின் சாபம் பெற்றவர்கள் என்றும் ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதே தருணத்தில் புதன் பகவானின் முதல் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால் குறிப்பாக அசுப கிரகங்கள் இருந்தால் எம்முடைய முன்னோர்கள் விதவை சாபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும், புதன் பகவானின் இரண்டாவது நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் ஏதேனும் அசுப கிரகங்கள் இருந்தால் எம்முடைய முன்னோர்கள் கர்ப்பிணி பெண்களின் சாபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும், புதன் பகவானின் மூன்றாவது நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் ஏதேனும் அசுப கிரகங்கள் இருந்தால் கன்னி பெண்களின் சாபங்கள் ஏற்பட்டிருக்கிறது என்றும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த நட்சத்திர பாதங்களில் கிரகங்கள் இருந்தாலும் அல்லது இந்த குறிப்பிட்ட நட்சத்திர பாதங்களில் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கும் கண்டாந்திர நட்சத்திர சாபம் ஏற்படும். அதாவது இந்த நட்சத்திர சாரங்களில் நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் கோச்சார ரீதியில் பயணிக்கும் போது கெடு பலன்களை அளிக்கும்.
குரு, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களின் கோச்சார பயணத்தின் போதும் அவர்களுடைய மூன்று பார்வைகள் குறிப்பிட்ட இந்த ஆறு நட்சத்திர பாதங்களின் மீது படும்போது இதற்கான கெடுபலன்கள் ஏற்படும்.
எனவே இதனை அனுபவம் மிக்க ஜோதிட நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அதற்கான பரிகாரத்தை மேற்கொண்டால் கெடுபலன் குறையும்.
இதற்காக சோதிட நிபுணர்கள் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட பிரத்யேக ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்ளுமாறு குறிப்பிடுவர் அல்லது எம்மண்ணில் உள்ள சிவபெருமான் மற்றும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று அதிலும் குறிப்பிட்ட திகதியில் சென்று இறை வழிபாட்டு பரிகாரத்தை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.
இத்தகைய கண்டாந்திர நட்சத்திர சாபம் இருப்பவர்கள் ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்ட வகையில் இறை வழிபாட்டு பரிகாரத்தை மேற்கொண்டு, தங்களுக்கு முன்னோர்களால் ஏற்பட்ட சாபத்தை சாந்தப்படுத்தி, அதன் மூலமாக இந்த பிறவியில் நீங்கள் அனுபவிக்கும் கெடுப் பலன்களின் வீரியத்தை குறைத்துக் கொள்ள இயலும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM