இன்றைய சூழலில் எம்மில் பலர் பலருக்கு தசை பிடிப்பு, தசை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதன் போது அருகில் இருக்கும் வைத்திய நிபுணரிடம் சென்று ஆலோசனை கேட்கும் போது அவர் தசைகளின் இயங்குத்திறனை கண்டறிவதற்கான எலக்ட்ரோமோகிராபி எனும் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்வார்.
இந்த பரிசோதனை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
மருத்துவ மொழியில் எலக்ட்ரோமோகிராபி என குறிப்பிடப்படும். இந்த பரிசோதனை தசைகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் நரம்பு செல்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை துல்லியமாக அவதானிப்பதற்காக பரிந்துரைக்கப்படும் பரிசோதனையாகும்.
இந்த பரிசோதனையில் நரம்பு செயலிழப்பு , தசை செயலிழப்பு, நரம்பிலிருந்து தசைகளுக்கு கடத்தப்படும் அல்லது இயல்பாக நடைபெறும் சமிக்ஞை பரிமாற்றத்தின் போது ஏற்படும் குறைபாடுகள் ஆகியவற்றை துல்லியமாக அவதானிக்க இயலும்.
கூச்ச உணர்வு, உணர்வின்மை, தசைப் பலவீனம், தசை வலி, தசை பிடிப்பு, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அந்த பாதிப்பு எதனால் ஏற்பட்டிருக்கிறது? என்பதனை அவதானிக்க இத்தகைய எலக்ட்ரோமோகிராபி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தசை சிதைவு, தசை கோளாறுகள், நரம்புக்கும், தசைக்கும் இடையேயான தொடர்புகளை சீர்குலைக்கும் பாதிப்புகள், பெரிபெரல் நரம்பியல் பாதிப்புகள், முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளுக்கு இடையேயான குறைபாடுகள், அமியோட்ராபிக் லேட்ரல் ஸ்கிளிரோசிஸ் எனப்படும் பாதிப்பு, மூளை மற்றும் தண்டுவடத்தில் உள்ள மோட்டார் நியூரான்களை பாதிக்கும் குறைபாடு, முதுகெலும்பில் உள்ள ஹெர்னியேட்டட் டிஸ்க் போன்ற நரம்பின் வேர்களை பாதிக்கும் சிக்கல்கள் ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து கண்டறிய இத்தகைய பரிசோதனை முறை அவசியமாகிறது.
இதன் போது நோயாளிகளுக்கு அவர்களுடைய பாதிப்பு எங்கு ஏற்பட்டிருக்கிறதோ அந்த இடத்தில் சிறிய அளவிலான ஊசி முனையை செருகி, அதனூடாக தசைகளின் ஆரோக்கியத் திறனையும், பாதிப்பின் தன்மையையும் கணினி மற்றும் மின் அதிர்வின் மூலமாக வைத்திய நிபுணர்கள் துல்லியமாக கண்டறிவர்.
அதனைத் தொடர்ந்து பாதிப்புகளை சீரமைப்பதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணத்தை தருவர். மேலும், இத்தகைய பரிசோதனை மற்றும் சிகிச்சையை நரம்பியல் வைத்திய நிபுணர்கள் வழங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
- வைத்தியர் வேணி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM