குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள Western Automobile Assembly Private Limited (WAA) ஆனது தனது அதிநவீன SKD வாகன பாகங்களை ஒன்றிணைத்து வாகனங்களை உருவாக்கும் ஆலையை ஆரம்பிப்பதை பெருமையுடன் அறிவிக்கின்றது.
இந்த அதிநவீன வசதியானது, உள்ளூர் வாகனங்களின் பாகங்களை இணைப்பதில் முக்கிய விடயமாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காகவும் காணப்படுகின்றது. அது மட்டுமன்றி, இளைஞர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் வாகன உற்பத்தி அறிவுகளை விருத்தி செய்வதன் மூலம் நிலைபேறான வளர்ச்சிக்கும் நிலையான செழிப்பிற்கும் இது உதவுகின்றது.
இந்த WAA SKD அசெம்பிளி ஆலையானது முதலீட்டு வாரியத்தினால் (Board of Investement) அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த ஆலையானது சர்வதேச வாகன நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்த ரமான இயந்திரங்களை கொண்டுள்ளதுடன் சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் பிரத்யேக மற்றும் அதி திறமையான உற்பத்தி செயல்முறையானது அதி உயர் உற்பத்தி கொள்கைகள் மற்றும் பல பிராண்ட் தேவைகளை கையாளும் திறனுள்ள நெகிழ்வான அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சர்வதேச ரீதியான தரத்திற்கான அதிநவீன விதிமுறைகளையும் மற்றும் பாதுகாப்பு தரத்தினையும் உள்வாங்கி செயற்படுகின்ற இந்த ஆலையானது பிராந்தியத்தின் முன்னோடி வாகன மையமாக மாறவும் எதிர்பார்க்கின்றது.
உள்நாட்டு இளைஞர்களின் திறமை மற்றும் சமூக மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதில் உறுதி பூண்டுள்ள WAA நிறுவனமானது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், ஆட்டோமொபைல் டெக்னாலஜி டிப்ளோமா கொண்டவர்களும் உள்ளடங்கலாக ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை நேரடியாக பணிக்கு அமர்த்தியுள்ளது.
அதுமட்டுமன்றி மனித வளம், நிர்வாகம் மற்றும் பேணுகை போன்ற துறைகளிற்கும் 25 பணியாளர்களை உள்வாங்கியுள்ளது. இந்நிறுவனம் பாதுகாப்பு, தளபாடங்கள், போக்குவரத்து, கேட்டரிங மற்றும் சலவை சேவைகள் உள்ளடங்கலாக பல உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை நிறுவியுள்ளதுடன் இது உள்ளூர் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான நேர்மறையான விளைவை ஏற்படுத்தி வருகின்றது.
இதுமட்டுமன்றி, WAA நிறுவனமானது பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கும் முக்கியமான அர்ப்பணிப்பை கொண்டு செயற்படுகின்றது. உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கேற்ப தொழிற்பயிற்சி வழங்கும் ஒரு சர்வதேச தரத்திலான பயிற்சி நிறுவனத்தை உள்ளூரிலேயே நிறுவியுள்ளதுடன் இந்த முயற்சியானது உள்நாட்டு இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் நாட்டின் நுண்ணிய பொருளாதார சூழலையும் மேம்படுத்துகின்றது.
வாகனத் தொழிற்துறை மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை இந்த நிறுவனம் வழங்குகின்றது. உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பயிற்சிகளை வழங்குவதற்கும் WAA அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
இவ்வாறானதொரு வாகன உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்து வைப்பது, இலங்கையில் தனது நிலைத்தன்மையை விரிவுபடுத்துவதற்கும் முன்னணி வாகன பாகங்களை ஒன்றிணைப்பதற்கும் மற்றும் உற்பத்தியாளர் என்ற நிலையை வலுப்படுத்தும் Western Automobile Assembly Private Limited நிறுவனத்தின் நீண்டகால உத்தியின் முக்கிய அங்கமாக காணப்படுகின்றது.
இந்நிறுவனமானது அதன் அனைத்து செயற்பாடுகளிலும் புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM