சாதனை படைத்து வரும் ஜூனியர் என் டி ஆரின் 'தேவரா- பார்ட் 1' பட முன்னோட்டம்

Published By: Digital Desk 7

11 Sep, 2024 | 04:37 PM
image

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தயாராகி இம்மாதம் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் 'தேவரா -பார்ட் 1' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்டமான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தேவரா - பார்ட் 1' எனும் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், சையீப் அலி கான், ஜானவி கபூர், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷேன் டாம் சாக்கோ, நரேன், கலையரசன், முரளி சர்மா, அஜய், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரத்ன வேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்து பிரம்மாண்டமான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யுவ சுதா ஆர்ட்ஸ் மற்றும் என் டி ஆர் ஆர்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாரித்திருக்கிறது.‌

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும் அதிலும் குறிப்பாக கதையின் நாயகனான தேவரா சாகசம் மிகுந்த கடற்கொள்ளையராக தோன்றுவதும், எக்சன் காட்சிகளும், உணர்வுபூர்வமான கொமர்ஷல் அம்சங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்டையன் - திரைப்பட விமர்சனம்

2024-10-10 16:02:13
news-image

கவனம் ஈர்த்ததா சிவகார்த்திகேயனின் 'அமரன்' பட...

2024-10-09 19:18:27
news-image

'பிக் பொஸ்' தர்ஷன் நடிக்கும் 'யாத்ரீகன்'

2024-10-09 19:25:53
news-image

ரஜினிகாந்தையும் அமிதாப்பச்சனையும் 'வேட்டையனில்' இணைக்கிறது லைக்கா...

2024-10-09 18:10:45
news-image

எழுத்தையும், எழுத்தாளரையும் கொண்டாடும் 'ஆலன்' திரைப்படம்...

2024-10-09 17:23:45
news-image

சுப்பர் ஸ்டாரின் 'வேட்டையன்' படத்தை பட...

2024-10-09 17:23:18
news-image

ஷான் ரோல்டனின் இசையில் கவனம் ஈர்க்கும்...

2024-10-08 20:50:47
news-image

பிரைம் வீடியோவின் அசல் திரில்லர் இணைய...

2024-10-08 21:02:59
news-image

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த...

2024-10-08 16:43:22
news-image

அர்ஜுன் - ஜீவா இணையும் 'அகத்தியா'

2024-10-08 21:03:58
news-image

வைபவ் நடிக்கும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்...

2024-10-08 21:04:37
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின்...

2024-10-08 21:05:23