தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தோனிமா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'காலம் ஓட..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தோனிமா' எனும் திரைப்படத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், விஷாவ் ராஜ், விவேக் பிரசன்னா, ராஜேஷ் ஷர்மா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், 'கல்கி' ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாக்கியராஜ் & சஜித் குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இ ஜே ஜான்சன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லேர்ன் & டீச் புரொடக்சன் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'காலம் ஓட கால் ரெண்டு தேவயில்ல..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் எஸ் .ஞானக்கரவேல் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் மாநகரத்தின் விளிம்பு நிலை மற்றும் எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது வாழ்வியல் கோட்பாடுகளையும் நேர்மையாக உரைப்பதாலும் ஜீவியின் மயக்கும் குரலில் வெளியாகி இருப்பதாலும் அதிலும் முதல் சரணத்தில் இடம் பெறும் 'வெள்ளந்தியா வாழும் கூட்டம் வெறுப்புகள பார்க்க முடியாதே ..'எனும் வரிகள் சிறப்பான கவனத்தை ஈர்த்திருப்பதாலும் இந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM