(எம்.ஆர்.எம்.வசீம்)
சுகாதார கொள்கைகளுக்கான நிலையம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் கருத்துக்கணிப்பீட்டின் இறுதி அறிக்கையின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்கவே முன்னிலையில் இருக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு மிக விரைவில் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுகாதார கொள்கைகளுக்கான நிலையம் ஆரம்பத்தில் இருந்து கணிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அதன் பிரகாரம் கடந்த ஜூன் மாதத்தின் அவர்களின் கணிப்பீட்டின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க மிகவும் பின்னிலையிலேயே இருந்தார். ரணில் விக்ரமசிங்கவும் நாமல் ராஜபக்ஷ்வும் ஒரே நிலையிலேயே இருந்தனர்.
அப்போது முன்னிலையில் சஜித் பிரேமதாச இருந்ததுடன் இரண்டாவது இடத்தில் அனுரகுமார திஸாநாயக்க இருந்தார். குறித்த கணிப்பீட்டின் பிரகாரம் ஜூன் மாத இறுதிப்பகுதியில் சஜித் பிரேமதாச சற்று பின்னடைந்து அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு விரைவாக அதிகரித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெரிடே ஆய்வு நிறுவனமும் இந்த விடயத்தை தெரிவித்திருந்தது. அதாவது கடந்த மாதங்களைவிட ரணில் விக்ரமசிங்கவுக்கான வாக்கு வீதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
அதன் பிரகாரம் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவை முந்திச்சென்றார். ஆகஸ்ட் 25ஆகும் போது அனுர குமாரவுக்கு நெருக்கமாக ரணில் விக்ரமசிங்க வந்திருந்தார்.
அதன் பிரகாரம் சுகாதார கொள்கைகளுக்கான நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள கணிப்பீட்டின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இருப்பதாகவும் இரண்டாவது இடத்தில் அனுரகுமார விஸாநாயக்க இருப்பதுடன் சஜித் பிரேமதாச மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஏ.ஐ.ஏ. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்ப ஆய்வின் பிரகாரமும், ரணில் விக்ரமசிங்கவுக்கான வாக்கு விரைவாக அதிகரித்துள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பீடுகளின் நிலையே தற்போது களத்திலும் காண்கிறோம். கிராமங்களில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு அதிகரித்து வருவதை காண்கிறோம்.
இந்த தேர்தல் பிரசார நடவடிக்கையை நாங்கள் சரியாக செய்தால், சந்திரிகா குமாரதுங்க பெற்ற வாக்கு வீதத்தையும்விட வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று நான் ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்திருந்தேன்.
அந்த நிலையே தற்போது சென்று கொண்டிருக்கிறது. தற்போதுள்ள நிலைவரத்தின் பிரகாரம் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
அத்துடன் எந்த வேட்பாளருக்கும் 50வீத வாக்குகள் பெற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. அது எந்த வித விஞ்ஞான ரீதியிலான ஆய்வின் பிரகாரம் தெரிவிக்கப்பட்டுவதல்ல. ரணில் விக்ரமசிங்க முதல் சுற்றுலேயே வெற்றிபெறுவது உறுதியாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM