Cerebral Venous Thrombosis எனப்படும் நோயிற்கான தீர்வு

Published By: Robert

24 Apr, 2017 | 12:51 PM
image

எம்மில் ஒரு சிலருக்கு அலுவலகத்தில் அதிகமாக பணியாற்றுவதாலோ அல்லது வீட்டில் ஓய்வில்லாமல் பணியாற்றுவதாலோ ஒற்றைத்தலைவலி எனப்படும் தலைவலி ஏற்படும். இதனை சாதாரண ஒற்றைத்தலைவலி என்று நாமே இதற்கான அறிகுறிகளை வைத்து சுயமருத்துவமோ அல்லது மருத்துவர்களை சந்தித்து எமக்கு ஒற்றைத்தலைவலி இருக்கிறது என்று உறுதியாக கூறி, அதற்கான நிவாரணத்தை கேட்டு பெறுவோம்.

ஆனால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலிக்குரிய அனைத்து அறிகுறிகளும் cerebral venous thrombosis எனப்படும் மூளையிலுள்ள இரத்த குழாய்களில் இரத்தம் இயல்பை விட அதிகமாக இரத்த உறைவதால் ஏற்படும் பிரச்சினைக்கான அறிகுறிகளும் ஒன்றாக இருக்கின்றன. இதனால் ஒற்றைத்தலைவலி என்றால் உடனே மருத்துவர்கள் சொல்லும் பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.

இதனால் ஒரு சிலருக்கு தாங்கமுடியாத ஒற்றைத்தலைவலி வந்தால் அவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் என்ற பாசோதனையை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள். இதன் மூலம், மூளையிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து வரும் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சிராக இருக்கிறதா என்பதையும், இதில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதையும் கண்டறிய இயலும். ஒரு சிலருக்கு இத்தகைய அடைப்பு ஏதேனும் இருந்தால் அதனை மருத்துவர்கள் cerebral venous thrombosis என்று குறிப்பிடுகிறார்கள். cerebral venous thrombosis என்றால் இரத்த அதிகளவில் உறைகிறது என்று பொருள். அதாவது ஆன்ட்டி திராம்பின் என்ற புரத சத்து தேவையான அளவிற்கு இல்லாமல், அதற்கு கீழே இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். இவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இரத்தம் அதிகளவில் உறைவதை தடுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த சிகிச்சை பெறுபவர்களில் பலருக்கு இது ஆயுள் முழுவதும் தேவைப்படலாம். 3 மாதத்திற்கொரு முறை மருத்துவர்களை சந்திக்கவேண்டியதிருக்கும். தொடர்ந்து 5 ஆண்டுகள் சிகிச்சை எடுத்த பின் பலர் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்கள். இதன் பின் அவர்களுக்கு முன்னர் வந்தது போன்ற கடுமையான ஒற்றைத்தலைவலி வருவதில்லை.

Dr. ரவி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43