12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; அயல் வீட்டு நபர் கைது

11 Sep, 2024 | 04:05 PM
image

12 வயது சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அயல் வீட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

07 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

இந்த சிறுமி தனது பெற்றோர், பாட்டன், பாட்டி மற்றும் இரு இளம் சகோதரிகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான அயல் வீட்டு நபர் இந்த சிறுமியை முதன்முதலில் கழிவறை ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில், பின்னர் தொடர்ந்து பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

சந்தேக நபரால் இந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதைப் பார்த்த மற்றுமொரு சிறுமி ஒருவர் இது தொடர்பில் தனது பாடசாலை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த ஆசிரியை இது தொடர்பில் மத்துகம பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29