(நெவில் அன்தனி)
பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (10) நாடு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பணிநிலை கடமைகள் பணிப்பக பணியாளரும் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நஜீவ எதிரிசிங்க, விளையாட்டுத்துறை பணிப்பாளர் பிரிகேடியர் துஷார பெர்ணான்டோ மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் சாமல் செனரத் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சமித்த துலானின் பெற்றோர், மனைவி குழந்தை ஆகியோரும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரெயா அட்மிரல் (ஓய்வுநிலை) ஷெமால் பெர்னாண்டோ உட்பட விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிளும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இராணுவ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமித்த துலானை இராணுவத் தளபதவி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
புதிய உலக சாதனை படைத்து இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற சமித்த துலானை பாராட்டிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவம் மற்றும் இலங்கை தாய்நாட்டிற்கு மேலும் பல வெற்றிகளைப் பெறவேண்டும் எனவும் வாழ்த்தினார்.
இந்த வைபவத்தின்போது சமித்த துலானின் திறமையை பாராட்டி நிதி உதவியும் வழங்கப்பட்டது.
பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கு64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து கு44 பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு வென்றிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM