மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு - நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Published By: Rajeeban

11 Sep, 2024 | 11:23 AM
image

மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் ஆராய்ந்துகொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மெக்சிக்கோ செனெட்டில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததால் செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான மொரேனாவிற்கு தேவையான வாக்குகள் கிடைத்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.

எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்சிக்கோவின் பதவி விலகும் ஜனாதிபதியின் நீதி;த்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு மாணவர்களும்,நீதித்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சீர்திருத்த திட்டத்தினால் நீதித்துறையின் சுதந்திரத்தி;ற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்களும்  விமர்சகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பகுதிக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை செவிமடுக்கின்றார்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மெக்சிக்கோ கொடியையும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு எதிரான வாசகங்களையும் ஏந்திய  ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதித்துறை வீழ்ச்சியடையாது என கோஷமிட்டுள்ளனர்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

 நீதித்துறை சீர்திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பது தங்களிற்கு தெரியும் என 30 வயது நீதித்துறை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் -...

2024-10-08 15:24:27
news-image

ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில்...

2024-10-08 12:04:22
news-image

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு: காங்.,...

2024-10-08 11:07:34
news-image

இஸ்ரேலிய தலைநகர் மீது ஹமாஸ் ரொக்கட்...

2024-10-07 16:58:16
news-image

சென்னை விமான சாகச நிகழ்வில் 240...

2024-10-07 12:11:06
news-image

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் வெடிப்புச்...

2024-10-07 10:18:09
news-image

ஹெஸ்புல்லா அமைப்பு ரொக்கட் தாக்குதல்- இஸ்ரேலின்...

2024-10-07 06:27:20
news-image

இஸ்ரேலில் பேருந்து நிலையமொன்றில் துப்பாக்கி சூடு...

2024-10-06 18:54:03
news-image

இஸ்ரேலிய பிரதமர் தனது அரசியல் எதிர்காலத்திற்காக...

2024-10-06 12:45:20
news-image

காஷ்மீர், ஹரியானாவில் காங். கூட்டணிக்கு வாய்ப்பு:...

2024-10-06 10:33:18
news-image

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் :...

2024-10-05 21:40:53
news-image

போர்க்கப்பல்கள் விமானங்கள் மூலம் தாக்குதல் -...

2024-10-05 06:05:01