bestweb

3 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; உறவினர் கைது

10 Sep, 2024 | 07:39 PM
image

3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த உறவினரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபரான உறவினர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மறுநாள் சிறுமியின் பாட்டி சிறுமியைக் குளிப்பாட்டுவதற்காக அழைத்துச் சென்ற போது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

பின்னர், சிறுமியின் பாட்டி இது தொடர்பில் புலஸ்திகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க...

2025-07-20 23:33:41
news-image

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த...

2025-07-20 22:25:42
news-image

ஜூலை 22 முதல் 25 வரை...

2025-07-20 21:15:56
news-image

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே...

2025-07-20 21:21:57
news-image

"பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம்...

2025-07-20 19:42:50
news-image

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 -...

2025-07-20 19:04:20
news-image

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட...

2025-07-20 18:43:57
news-image

மலையக மக்களில் வீடு வசதியற்ற நான்காயிரத்து...

2025-07-20 18:12:42
news-image

சம்பூர் கடற்கரையில் மிதிவெடி அகழ்வுப் பணியின்...

2025-07-20 22:58:54
news-image

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன்...

2025-07-20 23:03:26
news-image

பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில்...

2025-07-20 17:25:24
news-image

கொட்டாவை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர்...

2025-07-20 16:53:08