முதலாளிமார் சம்மேளனம் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் ; சம்பளத்தை அதிகரித்தமைக்காக வேலைப்பழுவை அதிகரிக்க முடியாது - வடிவேல் சுரேஷ்!

10 Sep, 2024 | 07:43 PM
image

(எம்.மனோசித்ரா)

அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதற்காக வேலைப்பழுவை அதிகரிப்பதற்கு கம்பனிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இந்த விடயத்தில் கம்பனிகள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும். அதே வேளை இது தொடர்பான வழக்குகளையும் கம்பனிகள் வாபஸ் பெற வேண்டும் என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். 

தொழில் அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை (10)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

நீண்டகாலமாக இழுபறியிலிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதற்கமைய 900 ரூபாவிலிருந்து 1350 ரூபாவாக அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

1350 ரூபாவுக்கு ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி மற்றும் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு கொடுப்பனவு என்பன வழங்கப்படும். அடிப்படை சம்பளத்தில் 15 சதவீதம் தொழில் தருணர்களால் ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படும். 

அதற்கமைய 1350 ரூபா அடிப்படை சம்பளமும், 202 ரூபா ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதி உள்ளடங்களாக நாளொன்றுக்கு தொழிலாளர்களுக்கு 1552 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் நேரத்திலிருந்து இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும். 

 ஊக்குவிப்பு தொடர்பில் கடந்த வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வகையில் இரு தரப்பினருக்கும் வழக்குகளை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியிருகின்றோம். 

அதே நேரம் ஊக்குவிப்பு தொடர்பில் அந்தந்த பிரதேச அடிப்படையிலும், துறைசார் ரீதியிலும் வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்ற விடயத்தை சம்பள நிர்ணயசபையில் தீர்மானிக்க முடியாது.  

வாழ்க்கை செலவுக்கு ஏற்றவகையில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இந்த விடயத்தில் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும். 

அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதற்காக வேலைப்பழுவை அதிகரிப்பதற்கு கம்பனிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இந்த விடயத்தில் கம்பனிகள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.  

தேர்தலின் பின்னர் தொழில் காரியாலங்களில் இது தொடர்பில் கண்காணிப்பதற்காக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 

 இந்த சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல என்ற போதிலும், பல வருடங்களுக்கு வழக்கு விசாரணைகளுக்கு செல்லாமல் தீர்வு காணப்பட்டுள்ளமை சாதகமான விடயமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41