இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில் தொழில் வாய்ப்பு

Published By: Digital Desk 7

10 Sep, 2024 | 07:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இஸ்ரேல் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைவாக  இலங்கை இளைஞர்கள் 2252பேருக்கு இஸ்ரேலிலில் விவசாய துறையில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 18ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் செல்ல இருக்கும் 69 இளைஞர்களுக்கான விமான பற்றுச்சீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (10) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது.

இஸ்ரேல் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைய 5 வருடகாலம் இஸ்ரேலில் தொழிலில் ஈடுபட அனுமதி வங்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு தொழிலுக்காக இலங்கை அரசாங்கம் சார்ப்பாக பணியகத்தினால் நபர்கள் அனுப்பப்படுவதுடன் தொழில்  வாய்ப்பாளர்கள் தெரிவு செய்யப்படுவது, இஸ்ரேலின் பீகா நிறுவனத்தின் அதிர்ஷ்ட சீட்டு முறையில் மாத்திரமாகும்.

அவ்வாறு தெரிவுசெய்யப்படும் நபர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பணியகத்தினால் மேற்கொண்டு இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் கிடைக்கப்பெறுகிறது.

இந்த தொழில் வாய்ப்புக்காக தொழிலாளர்களை இணைத்துக்கொள்ள வேறு எந்த நபர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அதனால்  இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் பெற்றுக்கொள்வதற்காக வேறு வெளிநபர்கள் யாருக்கும் பணம் வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பணியகம் பொது மக்களை கேட்டுக்கொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36
news-image

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி...

2024-10-08 21:01:37
news-image

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024-10-08 19:34:32
news-image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்...

2024-10-08 18:55:58
news-image

பாராளுமன்றத் தேர்தல் ; வேட்பாளர்களைத் தெரிவு...

2024-10-08 17:28:25
news-image

சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு...

2024-10-08 17:15:40
news-image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் யாழ். மாவட்ட...

2024-10-08 17:25:54
news-image

ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது...

2024-10-08 17:56:10