சொந்த வீடு ஒன்று வேண்டும் என்பது பலருக்கு கனவாகவோ அல்லது இலட்சியமாகவோ இருக்கிறது.அவ்வாறான ஒரு வீட்டினை நாம் கொள்வனவு செய்யும்போதோ அல்லது நிர்மாணிக்கும் போதோ அந்த வீடானது காலம் காலமாக எமக்கு பாதுகாப்பை தருவதுடன் எமக்கு மகிழ்வையும் மனநிறைவையும் தருவதாக இருத்தல் வேண்டும்.
எனவே இலட்சக் கணக்கிலோ கோடிக்கணக்கிலோ பணத்தை கொட்டி வீடு ஒன்றினை நாம் அமைக்கும்போது தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும். நீண்ட காலத்துக்கு எமது எதிர்கால சந்ததியினருக்கு அந்த வீடு நீடித்து நிலைக்க வேண்டும். நாட்டின் காலநிலையினையும் இதற்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டின் தட்ப வெப்பநிலை ,மழை ஆகியவற்றினை எதிர்த்து அந்த குடியிருப்பு எமக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.அதிலும் இலங்கையின் சீதோஷண நிலையானது தற்போது மாறி விட்டது. கடுமையான வெப்பநிலை நிலவுவதுடன் வருடத்தில் அநேக மாதங்களில் எதிர்பாராத மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.
எனவே இவ்விடயத்தில் நாம் பாரிய கவனம் செலுத்துவது அத்தியாவசியமானதாக திகழ்கிறது. எனவே இவ்விடயத்தில் கட்டிடக்கலைஞர்களின் ஆலோசனைகளை பயன்படுத்திக்கொள்வது எமக்கு பெரிதும் பயனை அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ரொஷான் சேனாரத்னவும் இவ்வாறானதொரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் ஆவர்.
இவ்வேளை சண்டே ஒப்சர்வர் உடனான உரையாடலில், கட்டிடக் கலைஞர் ரொஷான் சேனாரத்ன, வெளிப்புற சுவரில் வர்ணம் தீட்டும்போது காலநிலையினை கருத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வீட்டு உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு வீட்டை நிர்மாணிக்கும்போது , ஒருவரின் வீட்டைச் சுற்றியுள்ள சுவர்கள் காலநிலை வேறுபாடுகள் ஏற்படும் எவ்வேளையிலும் எதிர்த்து நிற்கக்கூடியவை என்பதை உறுதிசெய்து, இறுதி தூரிகை வரை, ஒவ்வொரு நிகழ்வையும் திட்டமிடுவது புத்திசாலித்தனமாகும் எனவும் அவர் கூறுகிறார்.
ஒரு வீட்டை நிர்மாணிக்கும்போது அல்லது புதுப்பிக்கும் போது வீட்டு உரிமையாளர் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்று நாட்டின் தட்பவெப்ப நிலையாகும் . ஒரு வெப்பமண்டல நாடாக, இலங்கை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 250 நாட்கள் மழையுடனான காலநிலையை அனுபவிக்கிறது.
இது குடியிருப்புகளின் கட்டமைப்பு மற்றும் நீர் உட்புகாது தடுத்தலின் அவசியம் ஆகியவை தொடர்பான கவலைமிகு சிந்தனைகளுக்கு வழிவகுக்கிறது. மேலதிகமாக , வெவ்வேறு பகுதிகளில் பருவங்கள்,வெப்பநிலை மாறுபாடுகள் வீட்டு உரிமையாளர்களுக்கு சவால்களை தோற்றுவிக்கிறது .
உதாரணமாக எமது நாட்டினை எடுத்துக்கொண்டால் மேல் மாகாணத்தில் ஓரளவு உயர்வான வெப்பநிலை நிலவுகிறது. ஆனால் மலையகப்பகுதிகளில் குளிரான காலநிலை நிலவுவதுடன் வெப்பநிலையானது 15 முதல் 18 டிகிரி செல்சியஸ் வரை நிலவுகிறது - இந்த மாறுபாடானது வெளிப்புற சுவர்களில் பொருத்தமான முறையில் வர்ணப்பூச்சு தீட்டுவதன் அவசியத்தை எமக்கு எடுத்துணர்த்துகிறது .
இத்தகைய மோசமான வானிலையிலிருந்து வீடுகளைப் பாதுகாக்கக்கூடிய வெளிப்புற வர்ணப்பூச்சுகள் வீடுகளின் கட்டமைப்பு சிறப்பிற்கு முக்கியமானவை.
"இந்த துறையில் எனது 35 வருட அனுபவத்தில், கடந்த 20 முதல் 30 ஆண்டுகளில் கைவினைத்திறனின் தரத்தில் சீரான வீழ்ச்சியை நான் அவதனைத்துள்ளேன். இதன் விளைவாக சிறந்த நீர்ப்புகா தரத்தை வழங்கும் வர்ணப்பூச்சுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன."
ஒரு கட்டிடக்கலை நிபுணராக, ரோஷன் அடிக்கடி நீர் புகும் நிலை மற்றும் கசிவு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விழைகிறார், இதற்கு உரிய தீர்வு காணப்படாவிடின் கட்டிடமானது நீண்ட காலத்துக்கு நீடித்து நிற்கும் நிலையை இழப்பதுடன் சேதத்துக்கும் உள்ளாகும்.
வீட்டு உரிமையாளருக்கான கல்வியறிவு
கட்டிடக் கலைஞர் ரொஷான் சேனாரத்னவின் சிந்தனையில் மீண்டும் மீண்டும் உதிக்கும் கருப்பொருள், சிறந்த தரம், உத்தரவாத ஆதரவுடன் கூடிய பொருட்கள் மற்றும் வேலைத்திறன் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் நீண்ட கால நன்மைகள் தொடர்பான கல்வியறிவினை வீட்டு உரிமையாளர்களுக்கு ஏற்படுத்துவதாகும்.
"வீட்டு உரிமையாளர்கள் வீட்டு நிர்மாணத்தின் வர்ணப்பூச்சு பூசும் கட்டத்தை அடையும் நேரத்தில், அவர்கள் பெரும்பாலும் வரவு செலவுக்கான வரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிதி மீதான அழுத்தம் ஆனது குறைந்த தரம் வாய்ந்த வர்ணப்பூச்சுகளைத் தேர்ந்தெடுக்க வழிவகுக்கிறது .
இவ்வாறான வர்ணப்பூச்சுகள் வர்ணம் மங்கி அடிக்கடி வர்ணம் பூசும் நிலையினை தோற்றுவிப்பதால் இறுதியில் நீண்ட செலவுக்கு வழி வகுக்கிறது. சேனாரத்ன, கட்டிட நிர்மாணத்தின் இறுதி கட்டங்களில் - குறிப்பாக தரமான வர்ணப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பதனை உறுதி செய்வதற்காக ஆரம்பத்திலிருந்தே சரியான வரவு செலவு திட்டம் மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
ஒரு வீட்டை உருவாக்குவது என்பது பெரும் உணர்வினை தோற்றுவிக்கும் செயற்பாடு மட்டுமல்ல. பாரிய முதலீட்டுக்கான விடயம் ஆகும். எனவே வீட்டினை நிர்மாணிக்கத் தொடங்கும்போதே வீடு காலத்துக்கும் நீடித்து நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து சரியான திட்டமிடுதலுடன் அப்பணியை ஆரம்பிப்பது அடிக்கடி பழுதுபார்த்தல் மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க மிகவும் முக்கியமானதாகும்.
எனவே, நிறுவனம் வழங்கும் நீர்ப்புகா உத்தரவாதமானது ஒரு முக்கியமான பரிசீலனையாகிறது. நீண்ட உத்தரவாதக் காலம், அனைத்து வானிலை நிலைகளிலிருந்தும் நுகர்வோரின் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக உற்பத்தியாளரின் தயாரிப்பு மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
"இந்தச் சூழ்நிலைகளைக் கையாள்வதில் வாடிக்கையாளர்கள் அடிக்கடி எனது ஆலோசனையைப் கேட்பார்கள் , மேலும் நிறுவனத்தின் உத்தரவாதத்தை வழங்கும் நன்கு சோதிக்கப்பட்ட தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதே எனது பரிந்துரையாகும்.
இது நுகர்வோருக்கு மன அமைதியை அளிக்கிறது. அதிக அளவிலான நீர் எதிர்ப்பு மற்றும் அதிக நீளம் கொண்ட நீர்புகாத தன்மையுடன் கூடிய வெளிப்புற வர்ணப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பது வீட்டு உரிமையாளர்களுக்கு சிறந்த தீர்வாகும். பிளாஸ்டரில் ஈரப்பதம் ஊடுருவி உங்கள் வீட்டை சேதப்படுத்தாமல் தடுக்க இது உதவும்."
[நேர்காணல் பற்றி]
ரொஷான் சேனாரத்ன தனது தந்தையின் விருப்பத்துடன் கட்டிடக்கலையை பயின்றார். கொழும்பில் உள்ள சிட்டி ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சரில் [City School of Architecture Colombo] (csa) கல்வி பயின்றார். கட்டிடக்கலை நிபுணர் சேனாரத்ன லண்டனில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்று இலங்கை திரும்பினார், இங்கு கட்டிடக்கலை துறையில் அவரது பயணம் வேரூன்றத் தொடங்கியது.
முராத் இஸ்மாயில் சன்னா தஸ்வத்த அசோசியேட்ஸில் அவரது பதவிக்காலம் ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்கியது, இது அவரது இலக்கிற்கு வழிவகுத்தது. அவரது கைவினைப்பொருளுக்கான அவரது அர்ப்பணிப்பு 2009 இல் இலங்கை கட்டிடக்கலை நிறுவகத்தால் வழங்கப்பட்ட கட்டிடக்கலை உரிம அங்கத்துவத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது.
கடந்த 15 ஆண்டுகளில், சேனாரத்ன ஒரு தனித்துவமான கட்டிடக்கலை நடைமுறையை செம்மைப்படுத்தி, 1,200 குடியிருப்புகள் மற்றும் வர்த்தக த் திட்டங்களுக்கான நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்துள்ளார்.
முக்கிய கூற்று
வீட்டு உரிமையாளர்கள் வீட்டு நிர்மாணத்தின் வர்ணப்பூச்சு பூசும் கட்டத்தை அடையும் நேரத்தில், அவர்கள் பெரும்பாலும் வரவு செலவுக்கான வரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிதி மீதான அழுத்தம் ஆனது குறைந்த தரம் வாய்ந்த வர்ணப்பூச்சுகளைத் தேர்ந்தெடுக்க வழிவகுக்கிறது, இவ்வாறான வர்ணப்பூச்சுகள் வர்ணம் மங்கி அடிக்கடி வர்ணம் பூசும் நிலையினை தோற்றுவிப்பதால் இறுதியில் நீண்ட செலவுக்கு வழி வகுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM