ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

Published By: Digital Desk 3

10 Sep, 2024 | 03:40 PM
image

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கியூபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் செப்டம்பர் 9-ஆம் திகதி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு "இட்ஸ் க்ளோடைம்" (It’s Glowtime) என்று ஆப்பிள் நிறுவனம் பெயரிட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐபோன்கள் மற்றும் இதர தயாரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டது.

ஐபோன் 16 சீரிஸில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற கருவிகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?

ஐபோன் 16 வரிசையில் நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை முறையே ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகும்.

செயற்கை நுண்ணறிவுடன் (Artificial Intelligence (AI)) கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப, தங்களின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுடன்  இந்த போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுடன்  புதிய வடிவமைப்பில், சிறப்பம்சங்களைக் கொண்ட ஐபோன்களை நாங்கள் வெளியிடுகின்றோம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டிம் குக் தெரிவித்தார்.

"ஜூன் மாதத்தில் இந்த ஆப்பிள் செயற்கை நுண்ணறிவை வெளியிட்டோம். மிகவும் சக்தி வாய்ந்த எங்களின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பல்வேறு வகையில் மிகவும் வித்தியாசமானது" என்றும் அவர் கூறினார்.

எழுத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் இந்த ஆப்பிள் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை பயனாளர்கள் நன்றாக உணர முடியும். இது மட்டுமின்றி, போனின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் உதவிக்கான சிரியின் செயல் திறனும் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் கூட, உடனடியாக பயனாளர்கள் இதனை பயன்படுத்த இயலாது. ஆப்பிள் செயற்கை நுண்ணறிவை சில மாதங்கள் கழித்தே இந்த போன்களில் அப்டேட்டாக வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. முதலில் இதன் 'பீட்டா' அம்சம் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, மற்ற நாடுகளுக்கு கொஞ்சம்கொஞ்சமாக விரிவுபடுத்தப்படும்.

ஐபோன் 16 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் 

சிறப்பம்சங்கள் என்ன?

பக்கவாட்டில் கமராவின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பட்டனுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமரா செயலிக்குள் நுழைவது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது, ஸூம் செய்வது, ஒளி அளவைக் கூட்டுவது, குறைப்பது போன்ற அனைத்தையும் இந்த பட்டன் மூலமே செய்ய முடியும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிமையாக எடுக்க இந்த சிறப்பம்சம் உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, விஷூவல் இண்டலிஜன்ஸையும் பயனாளர்கள் பயன்படுத்த இயலும்.

ஆக்‌ஷன் பட்டன்

இந்த போனில் மற்றொரு சிறப்பம்சமாக ஆக்‌ஷன் பட்டனை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஒரே நேரத்தில் ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாற இந்த பட்டனை அழுத்தினால் போதும்.

உதாரணத்திற்கு இந்த பட்டனை அழுத்தி நீங்கள் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்ய இயலும். கேமராவை இயக்க முடியும். போனை சைலண்ட் மோடுக்கு மாற்ற இயலும். இவை தவிர்த்த, கூடுதல் அம்சங்களும் இருக்கிறது.

ஏ18 சிப்

ஆப்பிள் இண்டலிஜென்ஸை இயக்கும் வகையில் ஏ18 மைக்ரோசிப்பை இந்த சீரிஸில் உள்ள போன்களில் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வந்த ஐபோன் சீரிஸ் போன்களைக் காட்டிலும் இரண்டு தலைமுறை முன்னிலையில் உள்ளது இந்த மைக்ரோசிப்.

ஐபோன் 15 சீரிஸில் ஏ16 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏ18 மைக்ரோசிப், பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும்.

கமரா

ஐபோன் 16 சீரிஸில் இடம் பெற்றுள்ள ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்‌ஸல் இரட்டை கமராக்களை கொண்டுள்ளது. டெலிபோட்டோ லென்ஸ் 2 மடங்கு காட்சியை விரிவுபடுத்தும் திறன் கொண்டது.

ஐபோன் 16 ப்ரோவில் 5 மடங்கு காட்சியை விரிவுப்படுத்த இயலும்.

ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் 

பேட்டரி, நிறம், திரை, சேமிப்புத்திறன் என்ன?

வீடியோ ப்ளேபேக்குடன் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 27 மணி நேரம் இயங்கும். ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 33 மணி நேரம் இயங்கும்.

ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஆகிய இரண்டு போன்களும் கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, டீல் நீலம், அல்ட்ராமரைன் நிறங்களில் கிடைக்கும்.

ஐபோன் 16 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் போன்ற போன்கள், கருப்பு மற்றும் வெள்ளை டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், டெசர்ட் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது.

போனின் திரையைப் பொருத்தவரை, ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 6.1 அங்குலம் அளவுடையது. ஐபோன் 16 ப்ளஸ் - 6.7 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ 6.3 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 அங்குலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் சேமிப்பு திறனானது 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபியாக உள்ளது. ஐபோன் ப்ரோவில் 1 டிபி (1TB) சேமிப்பு திறன் கொண்ட போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் ப்ரோ மேக்ஸ் போனில் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்புத் திறன் கொண்ட போன்கள் கிடைக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57