எம்மில் சிலருக்கு திடீரென்று ஒரு பக்க காது கேட்காமல் இருக்கும். சிலருக்கு வலது அல்லது இடது புற காதில் பாதிப்பு ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து காது கேளாமை பிரச்சனை ஏற்படும்.
இந்தத் தருணத்தில் எம்மில் பலரும் கேட்காத காதை பற்றி கவலை கொள்வதில்லை. கேட்கும் ஒரு புற காதை பற்றி மட்டுமே பாவித்து வாழ்க்கையை கடத்துவர்.
ஆனால் ஒரு பக்க காது கேளாமை பிரச்சினைக்காக சிகிச்சை எடுக்காமல் இருப்பது பெரும் பேராபத்தை ஏற்படுத்தும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதிக ஒலி எழுப்பும் இடத்தில் பணியாற்றுவது காதில் நோய் தொற்று ஏற்படுவது மற்றும் விவரிக்க இயலாத பல்வேறு காரணங்களால் பலருக்கும் ஒரு புற காது கேளாமை பாதிப்பு ஏற்படுகிறது.
இத்தகைய சிக்கலை உணர்ந்த உடன் உடனடியாக வைத்திய நிபுணர்களை சந்தித்து அது தொடர்பான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக காது கேட்கும் கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும்.
இதனை உடனடியாக மேற்கொள்ள தவறினால் காது கேட்காத பகுதியில் இருக்கும் நரம்புகள் சேதம் அடைவதுடன் செயலிழக்கத் தொடங்கி விடும்.
மேலும் நோயாளிகள் ஒரு புறத்தில் கேட்கும் செவித் திறனை மட்டுமே வாழ்நாள் முழுவதும் பாவிக்க தொடங்கினால் நாளடைவில் அந்த காதிலும் காது கேளாமை பிரச்சனை ஏற்பட்டால் அதன் பிறகு ஏற்கனவே பழுதடைந்திருக்கும் காதினை எம்மாதிரியான சிகிச்சைகள் மேற்கொண்டாலும் கேட்கும் திறனை முழுமையாக மீட்டெடுக்க இயலாத நிலை ஏற்படும்.
அதனால் வாழ்நாள் முழுவதும் காது கேளாமை பிரச்சனையுடனே வாழ வேண்டியதிருக்கும்.
இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஒரு பக்க காது கேளாமை பிரச்சனை ஏற்பட்டவுடன் அதற்காக வைத்திய நிபுணர்களை சந்தித்து காது கேட்கும் கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும்.
இதனால் உங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் நீங்கள் உங்களது வீட்டில் தனிமையில் இருக்கும் தருணத்தில் நவீன வடிவத்தில் அதாவது ப்ளூடூத் வடிவத்தில் விற்பனையாகும் காது கேட்கும் கருவியை பொருத்தி, இதற்கான நவீன நிவாரணத்தை பெறலாம்.
வைத்தியர் மனோஜ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM