எம்மில் சிலர் சூழ்நிலை காரணமாக பல்வேறு தவறுகளிலும், முறைகேட்டிலும், மோசடியிலும் ஈடுபடுகிறார்கள்.
வேறு சிலர் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கையூட்டு பெறுகிறார்கள். சிலர் தங்களுடைய தகுதியை மீறி வாழ்க்கையை வாழ வேண்டும் என விருப்பம் கொள்கிறார்கள்.இதன் காரணமாகவே குறுக்கு வழியில் பயணித்து பொருளீட்டுகிறார்கள்.
இதற்கு எதிராக அவர்களுடைய மனசாட்சி இருந்தால் அதற்கு முதிய வயதில் ஏதாவது பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என சமாதானப்படுத்தி தொடர்ந்து குற்றங்களை செய்கிறார்கள்.
சிலருக்கு அவர்கள் செய்த தவறுக்கான தண்டனை கிடைக்கிறது. பலருக்கு கிடைப்பதில்லை. ஆனால் இவையெல்லாம் அவர்களுடைய பாவக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அவர்களுடைய தலைமுறைகளில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்குகிறது.
உங்களது வீட்டில் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் சூரியன், சனி, ராகு, சேர்க்கை இருந்தாலும் அல்லது சூரியன் ,ராகு சேர்க்கை இருந்தாலும் அல்லது சூரியன் ,கேது சேர்க்கை இருந்தாலும் அவர்கள் முன்னோர்கள் செய்த பாவ செயலின் காரணமாக பித்ரு தோஷத்துடன் இந்த பிறவியில் இந்த பூமியில் அவதரித்திருக்கிறார்கள்.
இவர்கள் திறமை இருந்தாலும் பித்ரு தோஷத்தை வரமாக பெற்று வந்திருப்பதால் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம் கடினம்.
இது அவர்களை மட்டும் பாதிக்காமல் அவர்களுடைய வாரிசுகளையும், வாரிசுகளின் வளர்ச்சிகளையும் பாதிக்கிறது.
இவர்களில் சிலர் எம்முடைய முன்னோர்கள் செய்த பாவச் செயலை குறைப்பதற்காக அதற்கான பரிகாரங்களில் ஆர்வம் காட்டுவர்.
இதற்கு எம்முடைய முன்னோர்கள் வழியை காண்பித்திருக்கிறார்கள். அதிலும் மந்திர உச்சாடன பரிகாரம் என்ற ஒன்றும் உண்டு.
அவர்கள் முன்மொழியும் இந்த மந்திரத்தை ஒரு முறை ஒருமுகமான மனதுடன் உச்சரித்தால் போதுமானது.
அந்த மந்திரம் இதுதான்.
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜூனேஸ்வராய நமஹ !
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ ஓம்காரம் மலேஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ திரியம்பகேஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ!
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹ!
ஓம் நம சிவாய!! சிவாய நம ஓம்!!
இந்த மந்திரத்தை உங்கள் ஊருக்கு அருகே உள்ள தொன்மையான சிவாலயத்தில் சிவன் சன்னதிக்கு சென்று சிவனுக்கு சரக்கொன்றை அல்லது தும்பை பூவை அணிவதற்காக வழங்கிவிட்டு, பிரதோஷ காலத்தில் நடைபெறும் அபிஷேகம் , அலங்காரம் ,பூஜை ,தீபாரதனை , என அனைத்தையும் பார்த்துவிட்டு, அதன் பிறகு ஆலயத்தில் அமர்ந்து மனமுருக இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
உடனே எம்மில் சிலர் எங்கள் ஊருக்கு அருகே தொன்மையான சிவாலயங்கள் இல்லை என்பர். வேறு சிலர் எங்களால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜை புனஸ்காரங்களை கண்டு தரிசிப்பதற்கான கால அவகாசம் இல்லை என்பர்.
தொன்மையான சிவாலயங்கள் இல்லை என்றாலும் உங்கள் ஊருக்கு அருகே இருக்கும் ஆகம விதிப்படி செயல்படும் சிவாலயங்களில் பிரதோஷ நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
பிரதோஷ காலங்கள் ஞாயிறு அல்லது விடுமுறை தினங்களில் வந்தால் ஆலயங்களுக்கு செல்லலாம். ஆனால் பணி நாளில் பிரதோஷம் இருந்தால் எங்களால் ஆலயத்திற்கு செல்ல இயலாதே? என சிலர் கவலைக் கொள்வர்.
இவர்களுக்கு உங்களுக்கு சௌகரியமான தினத்தை தெரிவு செய்து, நித்திய பிரதோஷ காலம் என குறிப்பிடப்படும் மாலை நாலரை மணி முதல் 6:00 மணிக்குள்ளாக அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று சிவனுக்கு உகந்த தும்பை பூவை சாற்றி மனதார இந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்களுடைய தலைமுறை தலைமுறையாக தொடரும் பாவங்கள் நீங்கும்.
அதன் பிறகு உங்களுடைய வாழ்க்கையில் சுப பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM