(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக இம் மாதம் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டிக்கான இந்திய குழாத்தில் கே. எல். ராகுல், ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட பங்களாதேஷ் அணியை இந்தியா குறைத்து மதிப்பிடப் போவதில்லை.
இதன் காரணமாக முழுப் பலம் வாய்ந்த அணியுடன் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் 26 வயதுடைய யாஷ் தயாள் அறிமுக வீரராக இந்திய குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்;த இவர் 24 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 76 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிராக சென்னையில் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாத்தில் 6 துடுப்பாட்ட வீரர்கள், 2 விக்கெட் காப்பாளர்கள், 4 சுழல் பந்துவீச்சாளர்கள், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்திய குழாம்
ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷாப் பான்ட், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரிட் பும்ரா, யாஷ் தயாள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM