இலங்கையில் வங்கிச்சேவை மற்றும் நிதியியல் துறையில் முன்னிலைச் சக்தியாகத் திகழ்ந்து வருகின்ற மக்கள் வங்கி , தனது டிஜிட்டல் தளங்களில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் பதிவுகளைக் கடந்து, டிஜிட்டல் மகத்துவத்தில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் வெளிக்காண்பித்துள்ளது.
அதன் புத்தாக்கமான இணைய வங்கிச்சேவைகள், மொபைல் வங்கிச்சேவை செயலிகள் (app) மற்றும் வோலட் (wallet) தீர்வுகள் ஆகியவற்றினூடாக, சௌகரியம், பாதுகாப்பு மற்றும் அணுகக்கூடிய வங்கிச்சேவை ஆகியவற்றின் தராதரங்களை மக்கள் வங்கி தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.
“எமது இணைய வங்கிச்சேவை தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் ஆகியன வாடிக்கையாளர் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் அணுகக்கூடிய தன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பரவலாக பிரபலமடைந்துள்ளமைக்கு அவை பங்களித்துள்ளன.” என்று மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச குறிப்பிட்டார். “வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தீர்வாகஇ இலகுவான திறன்மிக்க மற்றும் நிகழ்நேர தீர்வுகளை வழங்கி, இலங்கையில் வங்கித்துறையின் பரிமாண வளர்ச்சியை முன்னின்று வழிநடாத்திச் செல்வதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் இச்சாதனை இலக்கின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகையில், “3 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகளுடன், எமது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள வலுவான வரவேற்பு, எமது டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது. தமது விருப்பத்திற்குரிய வங்கிச்சேவை கூட்டாளராக,மக்கள் வங்கியின் மீது நம்பிக்கை வைத்துள்ள எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.
தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் என இரு தரப்பினரதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளின் முழுமையான வரிசையை மக்கள் வங்கி வழங்குகின்றது. தனிநபர் வாடிக்கையாளர்கள் People’s Wave மொபைல் செயலி, People’s Web இணைய வங்கிச்சேவை மற்றும் People’s Pay வோலட் செயலி ஆகியவற்றின் மூலமாக பயனடைவதுடன், நிறுவன வாடிக்கையாளர்கள் People's Wyn மற்றும் People’s Web நிறுவன வங்கிச்சேவை தளங்களினூடாக வங்கிச்சேவைகளை அணுக முடியும்.
வாடிக்கையாளர் சௌகரியத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், தனது People’s Wiz கட்டமைப்பினூடாக தங்குதடையின்றிய, காகிதம் அல்லது படிவங்களின்றிய வழிமுறையில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு இடமளித்துஇ முழுமையாக டிஜிட்டல் கணக்கு ஆரம்பிக்கும் சேவையை மக்கள் வங்கி வழங்குகின்றது. இந்த புத்தாக்கமான சேவையானது டெப்லெட் சாதனமொன்றைப் பயன்படுத்தி, விரைவாகவும், திறன்மிக்க வழியிலும் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு டிஜிட்டல் முகவர்களுக்கு இடமளிக்கின்றது. இதை விடஇ சிறு வணிகங்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிமைப்படுத்த People’s Pay Merchant Module உதவுவதுடன், Lanka QR தொழில்நுட்பத்தை உள்வாங்குவதை அவர்களுக்கு இலகுபடுத்துகின்றது.
மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையானது மக்கள் வங்கியின் டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயங்களின் வெற்றிக்கு சான்றுபகருகின்றது. 2024 ஆம் ஆண்டில் முதல் 8 மாதங்களில் ரூபா 828 பில்லியனுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனை தொகையின் பெறுமதியுடன்இ 100 மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிறைவேறியுள்ளன.
டிஜிட்டல் வங்கிச்சேவை மீது மக்கள் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தியுள்ளது மாத்திரமல்லாது, வங்கியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதுடன், டிஜிட்டல் துறையில் வங்கியின் தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. இதன் பலனாக, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் பயனர்நேய வங்கிச்சேவை தீர்வுகளுக்காக மக்கள் வங்கியைத் தெரிவு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகின்றது.
1961 ஆம் ஆண்டு மக்கள் வங்கிச் சட்டமூல இலக்கம் 29 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி, ரூபா 3.0 டிரில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்களுடன் இலங்கையின் இரண்டாவது அதிபாரிய நிதி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. 747 கிளைகள் மற்றும் சேவை மையங்களுடனும், 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தளத்துடனும், நாட்டின் நிதித் துறையில் மக்கள் வங்கி தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வருகின்றது. அத்தியாவசிய வங்கிச்சேவைகளை வருடத்தில் எந்நேரமும் மேற்கொள்ள வசதியாக, 290 சுய வங்கிச்சேவை அமைவிடங்களையும் வங்கி தொழிற்படுத்தியுள்ளது.
புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிப்பதன் மூலமாக, நாட்டில் வங்கிச்சேவையின் எதிர்காலத்தின் தராதரத்தை மேம்படுத்தியவாறு, இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை மக்கள் வங்கி ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது.
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி - மக்கள் வங்கியின் 3,000,000வது டிஜிட்டல் வங்கிச்சேவை வாடிக்கையாளரான, ஊவா வெலஸ்ஸ பல்கலைக்கழகத்தின், மருத்துவபீடத்தின் தலைவரான, நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் லக்மால் ஹேவகே மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோருடன் காணப்படுகின்றார். பிரதிப் பொது முகாமையாளர் (கிளை முகாமைத்துவம்) நளின் பத்திரணகே, பிரயோக முறைமைகள் தலைமை அதிகாரி எஸ்.ஏ. சமரக்கோன், தலைமை டிஜிட்டல் அதிகாரி மங்கள காரியவசம் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM