யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அயலில் உள்ள எட்டுப் பாடசாலைகளை இணைத்து முத்தமிழ் விழா நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு எதிர்வரும் 17.09.2024 அன்று யா/கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் ஸ்தாபகர் வைத்தியர் அமரர் அப்பாப்பிள்ளை சின்னத்துரையின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
இத்திருவுருவச் சிலையை ஸ்தாபகரின் பேரனார் மாணிக்கவாசகர் ஜெயக்குமாரும், ஸ்தாபகரின் பெறாமகன் சுப்பிரமணியம் விஜயகுமாரும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.
பாடசாலையின் 90 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முத்தமிழ் மலர் வெளியீடும் நடைபெறவுள்ளது.
மலருக்கான வெளியீட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் நிகழ்த்தவுள்ளார். மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் முதல்வர் லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக லண்டனில் வசிக்கும் ஸ்தாபகரின் பேரனார் மாணிக்கவாசகர் ஜெயக்குமாரும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பாலசிங்கம் வாசுதேவனும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலைச் சமூகம் அன்புடன் அழைக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM