இந்தியாவில் குரங்கம்மை தொற்று அறிகுறியுடன் ஒருவர் அடையாளம்

Published By: Digital Desk 3

10 Sep, 2024 | 09:25 AM
image

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் இலங்கையில்  இது குறித்து விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.

ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

அவருக்கு எந்த வகையான குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டவில்லை.

இந்நிலையில், நாட்டில்  குரங்கம்மை குறித்து  கண்காணிப்புக்கான நடவடிக்கைகளை அமைச்சகம் அதிகரித்துள்ளது.

அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ஏனெனில் பல நாடுகளில்  இதுவரை பதிவாகியுள்ள தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது. பொதுவாக குரங்கம்மை  இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். காய்ச்சல் ஏற்பட்டதும் சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். 

ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.

தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும், கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதி...

2024-10-10 17:08:28
news-image

மில்டன் சூறாவளி கரையைக் கடந்தது: புளோரிடா...

2024-10-10 14:08:33
news-image

ஹெஸ்புல்லா அமைப்பு ரொக்கட் தாக்குதல் -...

2024-10-10 06:10:14
news-image

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

2024-10-10 00:55:52
news-image

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான தேர்தலில்...

2024-10-09 16:53:56
news-image

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது...

2024-10-09 16:51:03
news-image

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன ராணுவ...

2024-10-09 15:15:17
news-image

தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள...

2024-10-09 14:54:38
news-image

“நஸ்ரல்லாவுக்கு அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்; இனி...

2024-10-09 13:50:55
news-image

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும்...

2024-10-09 11:06:53
news-image

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் -...

2024-10-08 15:24:27
news-image

ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில்...

2024-10-08 12:04:22