ஆசியாவில் நிலவும் சுவாச நோய் தன்மைகளை எதிர்த்துப் போராட உலக முன்னணி வல்லுநர்கள் இலங்கையில் ஒன்று கூடுகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள சுவாச சுகாதார நிபுணர்கள் இந்நோய் தாகத்திற்கு எதிரான தங்கள் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையிலும், ஆசிய பிராந்தியத்தில் சுவாச நோய்களின் பாதிப்புகளை குறைத்திட நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சியின் பரந்துபட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொழும்பில் ஒன்று கூடுகின்றனர்.
சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட்டின் (RESPIRE) வருடாந்த அறிவியல் கூட்டம் 2024 ஆவணி 27 முதல் 29 வரை நடைபெறுகிறது, மேலும் 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிப் பிரிவானது, இலங்கையில் சுவாச ஆரோக்கிய ஆராய்ச்சிக்கான மேலதிகமான முதலீட்டுக்கான அவசியத்தை எடுத்துக்காட்டும் வகையில் நாடொன்றில் ஒரு மாநாட்டை நடத்துவது இதுவே முதன் முறையாகும்.
இந்த மூன்று நாட்களுக்கான தொடர் கூட்டத்தில் 2024 ஆவணி 27ஆம் திகதியன்று தொடக்க விழாவில், சுகாதார அமைச்சு, இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரி மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களின் சுகாதார பீடங்களின் கௌரவ விருந்தினகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பிராந்தியதில் சிறந்த சுவாச ஆரோக்கியத்தை உறுதி செய்யும் முகமாக ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஆய்வுகளின் சமீபத்திய விடயங்களை தெரியப்படுத்துவதோடு உலகளாவிய சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியம் விவாதிபார்கள்.
இலங்கையின் சுகாதார அமைப்பில் சுவாச நோய்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
2017 ஆம் ஆண்டில் இலங்கை மருத்துவமனை இறப்புகளில் நாட்பட்ட சுவாச நோய்கள் (CRD)மற்றும் நிமோனியா ஆகியவை இரண்டும் அதிக எண்ணிக்கையிலான (18%) மரணங்களுக்கு காரணமாய் அமைந்துள்ளன.1 கடந்த தசாப்தத்தில் விகிதாசார இறப்பு தரவுகளின் ஒப்பீடுகள், இந்த இரண்டு வகையான நோய்களினால் மருத்துவமனையில் இறப்புகள் அதிகரித்து செல்லும் போக்கின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
நாள்பட்ட சுவாச நோய்களில், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சிஓபிடி) ஆகிய இரண்டு வகையான நோய்களே அதிக நோய்த் தாக்கத்தையும் இறப்பையும் ஏற்படுத்தும் முன்னணி நோய்களாக அமைகின்றன. குழந்தை பருவத்தினர் பள்ளி செல்லாதிருப்பதற்கு மூச்சுத்திணறல் ஓர் முக்கிய காரணமாக இருப்பதோடு பெரியவர்களில், ஆஸ்துமா மற்றும் சிஓபிடி முறையே 11% மற்றும் 10.5% அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
நுரையீரல் புற்றுநோய் உட்பட பல சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு அசுத்தமான காற்றின் தன்மையே காரணம் என்று கூறப்படுகிறது. நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்துவரும் மோட்டார் வாகனங்களின் பாவனையானது, நாடு முழுவதும் சுற்றுப்புற சூழலின் காற்றின் தரம் தாழ்த்தப்பட்டமையுடன் தொடர்புபட்டதாய் அமைகிறது.
நகரங்களில் வெளிப்புற காற்று அசுத்தமடைதல் ஒரு முக்கிய விடயமாக இருப்பதைப் போலவே, கிராமப்புற சமூகங்களில் காற்றோட்டம் இல்லாத சமையலறைகளில் உணவு சமைக்க விறகுகள் பயன்படுத்தப்படுவது உட்புற காற்று அசுத்தமடைதளுக்கான ஒரு அச்சுறுத்தும் காரணியாக அமைகிறது.
கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த புகைபிடிக்கும் பழக்கமற்ற பெண்களிடையே சமையலறையிலிருந்து வெளிப்படும் புகையினாலேயே நாட்டப்பட்ட மூச்சுத்திணறல் நோயானது ஏற்படடுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. உயிரிவாயுவை சுவாசிப்பதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகாதார விளைவுகள் பற்றிய ஆய்வு கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரண்டு முக்கிய மாவட்டங்களில் நடத்தப்படும்.
இவர்கள் வளி மாசடைதல் மற்றும் புகையிலைப் பயன்பாடு பற்றி நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களை; ஆராய்ந்து, அதில் காணப்படும் குறைபாடுகளையும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் கண்டறிவார்கள். இலங்கையில் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பயனளிக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களை இவ் வேலைத்திட்டமானது வெளிக்கொணரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
2019 ஆம் ஆண்டில், சிஆர்டி (CRD) ஆனது உலகளாவிய இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாக
1. 100,000 மக்கள் தொகைக்கு 218.5 இறப்புகளில் 39.3
சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட் (RESPIRE)
www.ed.ac.uk/usher/respire
RESPIRE@ed.ac.uk
ஆசிரியர்களுக்கான குறிப்புகள்
ஊடக விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:
பேராசிரியர் சாவித்திரி விமலசேகர, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம். savithriww@yahoo.com
பேராசிரியர் துமிந்த யசரத்ன, பேராதனைப் பல்கலைக்கழகம். yasaratne@yahoo.com
சுவாச ஆரோக்கியம் (RESPIRE) பற்றிய NIHRகுளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட் பற்றி விபரம்
தெற்காசியாவில் சுவாச நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் பரவலான உடல்நலம் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதையே RESPIRE நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆசியாவில் சுவாச நோய் மற்றும் இறப்பைக் குறைப்பதற்காக எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் மலாயா யுனிவர்சிட்டி மலாயா ஆகியவற்றின் தலைமையில், வங்கதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள ரெஸ்பைர் அமைப்பினர் குறைந்த செலவு, அளவிடக்கூடிய கொள்கை மற்றும் மருத்துவ தலையீடுகளை வழங்கி இணைந்து செயற்படுகின்றனர்.
RESPIRE இன் ஆராய்ச்சி திட்டங்கள் தொற்று நோய்களை உள்ளடக்கியது. உதாரணம் - காசநோய் மற்றும் நிமோனியா, தொற்றாத நோய்கள் - ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய், தடுக்கக்கூடிய ஆபத்து காரணிகள் - காற்றின் தரம் மற்றும் புகையிலை பயன்பாடு மற்றும் சுவாச ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்.
உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக்கு ஆதரவாக யுகே அரசாங்கத்தின் யுகே சர்வதேச மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி NIHR 16/136/109 மற்றும் NIHR132826 ஆகியவற்றால் RESPIRE நிதியளிக்கப்படுகிறது. இந்த வெளியீட்டில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின்(கள்) கருத்ததுக்களே அன்றி NIHR அல்லது யுகே அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல.
மேலதிக தகவல்களுக்கு
Twitter/X மற்றும் Facebook மற்றும் www.ed.ac.uk/usher/respire/ அல்லது @RESPIREGlobal இனை பார்வையிடவும்.
உடல்நலம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIHR)
தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (NIHR) நோக்கம், ஆராய்ச்சி மூலம் நாட்டின் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மேம்படுத்துவதாகும்.
இதனை நாம் பின்வருமாறு செயற்படுத்துகிறோம்:
உரிய காலத்தில் தேசிய சுகாதார சேவை, பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பயனளிக்கும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்தல்;
ஆராய்ச்சியின் கண்டறிதல்களை மேம்படுத்தவும், சிகிச்சைகள் மற்றும் சேவைகளை வழங்க உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள், செயற்பட்டு உதவியாளர்கள் மற்றும் திறமையான பணியாளர்களில் முதலீடு செய்தல்;
⦁ எங்கள் ஆராய்ச்சியின் பொருத்தப்பாடு, தரம் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் விளைவுகளின் தாக்கத்தினை மேம்படுத்துவதற்காக நோயாளர்கள், சேவைகளை வழங்க உதவுபவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக அங்கத்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படல்;
⦁ சிக்கல் தன்மையான உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சவால்களைச் கையாளக்கூடிய சிறந்த ஆராய்ச்சியாளர்களது கவனத்தை எம்பக்கம் ஈர்த்தல், அவர்களுக்கு உகந்த பயிற்சிகளை அளித்து ஆதரித்தல்;
⦁ ஏனைய பொது நிதிவழங்குனர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையாளர்களுடன் கைகோர்த்து, ஒரு ஒருங்கிணைந்த மற்றும் உலகலாவிய ரீதியில் போட்டித்தன்மையுள்ள ஆராய்ச்சி முறையை வடிவமைக்க உதவுததல்;
⦁ குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாடுகளில் (LMICs) வாழும் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு நிதியுதவி வழங்குதல்;
NIHR இற்கு சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையால் நிதி வழங்கப்படுகிறது. NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் போர்ட்ஃபோலியோ யுகே அரசாங்கத்தின் சர்வதேச மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி LMIC களில் வாழ்பவர்களின் நேரடியானா மற்றும் அத்தியாவசிய நலனுக்காக உயர்தர பயன்பாட்டு சுகாதார ஆராய்ச்சிக்கு உதவுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM