(நெவில் அன்தனி)
கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கம்போடியாவுக்கு எதிரான AFC ஆசிய கிண்ண கால்பந்தாட்ட முதலாம் கட்ட தகுதிகாண் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட இலங்கை, இரண்டாம் கட்டப் போட்டியில் வெற்றிபெறும் கங்கணத்துடன் களம் இறங்கவுள்ளது.
இரண்டாம் கட்டப் போட்டி கம்போடியா, நொம் பென்ஹ் தேசிய விளையாட்டரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (10) இரவு நடைபெறவுள்ளது.
முதலாம் கட்டப் போட்டி கோல்கள் போடப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது தனக்கு திருப்தியைக் கொடுக்கின்ற போதிலும் இரண்டாம் கட்டப் போட்டியில் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என முதலாம் கட்டப் போட்டி முடிவில் ஊடகங்களிடம் இடைக்கால பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்திருந்தார்.
ஆனால், கம்போடியாவின் பலம், பலவீனத்தை அறிந்துகொள்ள கிடைத்துள்ளதால் இரண்டாம் கட்டப் போட்டியை இலங்கை வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
'முதலாம் கட்டப் போட்டியில் எமது வீரர்கள் கோல்களைத் தவறவிட்டது எமக்கு சிறு பாதகத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது. ஆனால், நாளை நடைபெறவுள்ள போட்டியில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதற்கான வியூகங்களை அமைத்துக்கொண்டுள்ளேன். அந்த வியூகங்களுடன் இலங்கை அணியினர் விளையாடி வெற்றிபெறுவார்கள் என நம்புகிறேன்' என அல் முத்தய்ரி மேலும் கூறினார்.
கொழும்பில் போட்டி முடிவடைந்த மறுநாளான வெள்ளிக்கிழமை (11) இரவு இலங்கை கால்பந்தாட்ட அணியினர் கம்போடியா பயணமாகினர். கடந்த மூன்று தினங்களாக இலங்கை அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதுடன் கம்போடியாவின் காலநிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டுள்ளனர். எனவே இலங்கை அணியினர் அதி உயரிய ஆற்றலைக் காணக்கூடியதாக இருக்கும் என இலங்கை அணியினருடன் கம்போடியா சென்றுள்ள இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
இலங்கை குழாம்
சுஜான் பெரேரா (தலைவர்), அனுஜன் ராஜேந்திரம், வேட் டெக்கர், ஒலிவர் கெலாட், சமுவேல் டுரான்ட், லியோன் பெரேரா, குளோடியோ மெத்தியாஸ், பரத் சுரேஷ், ஜெக் ஹிங்கேர்ட், ஆதவன் ராஜமோகன், ஜெசன் தயாபரன், ஹர்ஷ பெர்னாண்டோ, ஜூட் சுபன், மொஹமத் ஆக்கிப், மொஹமத் ஹஸ்மீர், மொஹமத் அமான், வஸீம் ராஸீக், சக்கே ஸ்டீவன், சமுவேல் டுரான்ட், ஷெனால் சந்தேஷ், வொரந்த பெரேரா, மொஹமத் ரிப்கான், கவீஷ் பெர்னாண்டோ, மொஹமத் முர்சித், தேனுக்க ரனவீர.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM