(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை 8 விக்கெட்களால் ஆறுதல் வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய இங்கிலாந்து 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை தனதாக்கிக்கொண்டது.
வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுக்கள், பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதம் மற்றும் சதம், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முதல் இனனிங்ஸில் குவித்து அரைச் சதங்கள் என்பன இலங்கையின் ஆறுதல் வெற்றிக்கு வழிவகுத்தன.
இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 1998இல் வெற்றிகொண்ட இலங்கை, அதே மைதானத்தில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றியீட்டி வரலாறு படைத்துள்ளது.
இதன் மூலம் கியா ஓவல் விளையாட்டரங்கில் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்த்தாடிய 2 சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிபெறுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் வெற்றிபெற்றுள்ளதுடன் இங்கிலாந்து மண்ணில் இலங்கை ஈட்டிய 4ஆவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
மேலும் இங்கிலாந்துக்கு எதிராக 2014க்குப் பின்னர், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் விளையாடப்பட்ட 10 டெஸ்ட் போட்டிகளில் 9இல் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இந்த 10 வருடங்களில் 11ஆவது போட்டியிலேயே இலங்கை முதலாவது வெற்றியை ஈட்டியது.
219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பெத்தும் நிஸ்ஸன்க 2ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 69 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் 111 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.
124 பந்துகளை எதிர்கொண்ட பெத்தும் நிஸ்ஸன்க 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
11ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க பெற்ற 2ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 7 பவுண்டறிகளுடன் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
இப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை (09) பகல் போசன இடைவேளைக்கு முன்னர் நிறைவுக்கு வந்தது.
எண்ணிக்கை சுருக்கம்
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 325 (ஒல்லி போப் 154, பென் டக்கெட் 86, மிலன் ரத்நாயக்க 56 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 18 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 46 - 2 விக்., லஹிரு குமார 97 - 2 விக்.)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 263 (தனஞ்சய டி சில்வா 69, பெத்தும் நிஸ்ஸன்க 64, கமிந்து மெண்டிஸ் 64, ஒல்லி ஸ்டோன் 35 - 3 விக்., ஜொஷ் ஹல் 53 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 42 - 2 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 156 (ஜெமி ஸ்மித் 67, டான் லோரன்ஸ் 35, லஹிரு குமார 21 - 4 விக்., விஷ்வா பெர்னாண்டோ 40 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 49 - 2 விக்.)
இலங்கை (வெற்றி இலக்கு 219 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 219 - 2 விக். (பெத்தும் நிஸ்ஸன்க 127 ஆ.இ., குசல் மெண்டிஸ் 39, ஏஞ்சலோ மெத்யூஸ் 32 ஆ.இ.)
ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க, தொடர் நாயகன்: ஜோ ரூட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM