கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெற்றோல்நிரப்பு  நிலையங்களில் திடீரென மக்கள் கூட்டம் அலைமோதுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பெற்றோலிய வர்த்தக சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே எண்ணெய் நிரப்பு நிலையங்களில்  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருகோணமலை துறைமுகத்திலுள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்திய நிறுவனத்துக்கு (ஐ.ஓ.ஸி.) வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாளை நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையொன்று நிலவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.