இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் 'ஹிட்லர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடியாத்தி..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். ஏ. தனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஹிட்லர்' எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண் ராஜ், விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி , 'ஆடுகளம்' நரேன், தமிழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி டி ராஜா மற்றும் டி ஆர் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இணையத்தில் வெளியிடப்பட்ட குறுகிய கால அவகாசத்திற்குள் இலட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்ட இந்தப் பாடலை பாடலாசிரியர் பிரகாஷ் பிரான்சிஸ் எழுத, இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான மெர்வின் சாலமன் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடலில் காதலும், மெல்லிசையும் கலந்திருப்பதாலும் பாடலுக்கான காணொளியில் காதலர்களுக்கு இடையே காதல் செய்யும் மாயம் குறித்த காட்சிகளாக இடம் பிடித்திருப்பதாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM