தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகருக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் நடிகர் விக்ராந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தி கில்லர் மேன் ' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, விக்ராந்த் - யோகி பாபு உள்ளிட்ட பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
'வில் அம்பு' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கில்லர் மேன்' எனும் திரைப்படத்தில் விக்ராந்த், பவித்ரா மாரிமுத்து, யோகி பாபு , இனிகோ பிரபாகர், மிப்புசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கே கே ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை பிக் பேங்க் சினிமாஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான 'லால் சலாம்' எனும் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெறாததால் அவரின் நடிப்பில் வெளியாகும் இந்த 'தி கில்லர் மேன்' எனும் திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM