'பாகுபலி' படத்தின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகர் ராணா டகுபதி, தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்தாலும் பான் இந்திய நட்சத்திரமாக அறியப்படும் இவர் தற்போது ஸ்பிரிட் மீடியா எனும் புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இதன் முதல் தயாரிப்பாக 'காந்தா' எனும் திரைப்படத்தினை தயாரிக்கிறார்.இதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் படப் பிடிப்புடன் தொடங்கியது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'காந்தா' எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான், பாக்யா ஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் எனும் நிறுவனமும், நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியாவும் இணைந்து தயாரிக்கிறது. இதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது நடிகர் வெங்கடேஷ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி, இப்படத்தின் படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' காந்தா படத்தின் மூலம் பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறோம். அதே தருணத்தில் சமகால உணர்வுகளை பிரதிபலிக்கும் படைப்பாகவும் இப்படம் இருக்கும்'' என்றார்.
ராணா டகுபதி - துல்கர் சல்மான் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தாலும் தயாரிப்பாளர்களாக முதன் முறையாய் இணைந்து இருப்பதால், இவர்களது தயாரிப்பில் உருவாகும் 'காந்தா' படத்திற்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM