இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடை முறையையும், உணவு முறையையும் மாற்றிக் கொண்டிருப்பதால் விவரிக்க இயலாத சுகவீனங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
மூளை பகுதியில் கட்டி மற்றும் நரம்பியல் கோளாறுகளால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சீரமைக்க தற்போது கைரோஸ்கோபிக் கதிர்வீச்சு சிகிச்சை எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய மூளை பகுதியில் உள்ள நரம்புகள் சிக்கலான அமைப்பை கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த தருணத்தில் நரம்பியல் மண்டலத்தில் குறிப்பாக மூளை பகுதியில் உள்ள நரம்பியல் மண்டலத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது மூளைப் பகுதியில் புற்றுநோய் மற்றும் புற்று நோய் அல்லாத கட்டிகள் ஏற்பட்டாலோ அதற்காக சத்திர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.
இருப்பினும் இத்தகைய பாதிப்பை சீரமைக்க தற்போது கைரோஸ்கோபிக் கதிர்வீச்சு சிகிச்சை எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.
இந்த சிகிச்சைக்காக தெரிவு செய்யப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு முன் பல கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது அதனைத் தொடர்ந்து கைரோஸ்கோபிக் கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த சிகிச்சை 30 நிமிட கால அளவிற்கு நீடிக்கும் . இதன் போது நோயாளி பிரத்யேக கருவி ஒன்றுடன் பொருத்தப்பட்டு, அதிலிருந்து எந்த பகுதியில் கட்டி இருக்கிறதோ அதனை மட்டும் துல்லியமாக முப்பரிமாண வடிவத்தில் கணினி உதவியுடன் அவதானித்து, அதன் மீது கதிர்வீச்சு செலுத்தப்படுகிறது. அந்த கதிர்வீச்சின் வீரியம் கட்டியை பொறுத்து வைத்திய நிபுணர்களால் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், இதன் போது புற்றுநோய் கட்டிக்கு அல்லது மூளை கட்டிக்கு அருகில் இருக்கும் ஆரோக்கியமான திசுக்களுக்கு மிக மிக குறைவான பாதிப்புகளே ஏற்படுகிறது. இந்த சிகிச்சையை நோயாளி மேற்கொள்ளும் போது, அவருடைய மூளை பகுதியில் உள்ள கட்டிகள் அகற்றப்பட்டு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறை மற்றும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை ஆறு மாத காலம் தொடர வேண்டியதிருக்கும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வைத்தியர் கௌரவ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM