குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

Published By: Digital Desk 2

09 Sep, 2024 | 03:57 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தெரிந்த நண்பர்களிடமும், வங்கிகளிடமும், தனியார் நிதி நிறுவனத்திடமும், அறக்கட்டளையிடமும் ஓரளவிற்கு கடன் உதவி பெற்று, சிறிய அளவில் குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்குகிறார்கள். 

இந்தத் தொழிலில் அவர்களுக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து வாடிக்கையாளர்களையும், விற்பனையாளர்களையும் கவர்ந்து தங்களது தொழிலை விரிவு படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் தொழில் நன்றாக இருக்கும் போது குறிப்பாக நீங்கள் தொடங்கிய தொழிலில் பெரிய அளவில் போட்டிகள் ஏதும் இல்லாத நிலையிலும் உங்களது தொழில் மந்தகதியில் பயணித்தால் அல்லது  லாபம் குறையத் தொடங்கினால் அல்லது நஷ்டம் ஏற்பட தொடங்கினால் நீங்கள் பதற்றமடைய வேண்டாம்.

ஏனெனில் உங்களுக்கு பரிபூரணமாக குலதெய்வத்தின் அருள் இல்லை என்பதே இந்த நிலைக்கு காரணம்.  குலதெய்வத்தின் பரிபூரணமான அருள் இல்லை என்றால் உங்களது வாழ்க்கையில் நஷ்டங்களும் கஷ்டங்களும் தொடரும்.

பெரும்பாலானவர்கள் தங்களது குலதெய்வம் எது? என்று தெரியாது என எளிதாக சொல்லி விடுவர். ஆனால் இது முற்றிலும் தவறானது. ஏனெனில் அவர்கள் தங்களது குலதெய்வம் எது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை.  இது போன்ற தருணத்தில் நீங்கள் உங்களது குலதெய்வம் எது? என்று தெரிந்து, குலதெய்வத்தை சாந்தப்படுத்த வேண்டும் .

குலதெய்வம் உங்களுக்கு ஏதேனும் சாபத்தை அளித்திருந்தாலோ அல்லது உங்கள் மீது கோபமாக இருந்தாலோ அல்லது அதுவே தோஷமாக மாற்றம் அடைந்து இருந்தாலோ நீங்கள் பரிகாரம் செய்யாமல் உங்களுடைய வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்காது என்பதை உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள்.

உடனே எம்மில் சிலர் குல தெய்வத்தின் தோஷத்தை நீக்க என்ன செய்ய வேண்டும்? என கேட்பர். இதற்கான எளிய வழிமுறைகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள். உங்களது குலதெய்வம் எது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட்டாலே குலதெய்வத்திற்கான குறிப்புகள் உங்களை வந்தடையும்.

அதே தருணத்தில் குலதெய்வம் உங்கள் மீது கோபமாக இருந்தால் அதனை சாந்தப்படுத்த நீங்கள் எப்போது வழிபட வேண்டும் என்றால் பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் நாளில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் இருந்து ஐந்தாவது மாதத்தில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் மட்டும் இல்லாமல் நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ஆறாவது நட்சத்திரம் வரும் நாளில் நீங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குலதெய்வத்தின் கோபம் சாந்தமடையும். குலதெய்வ தோஷமும் நீங்கும்.

இன்னும் துல்லியமாக அவதானித்து கூறவேண்டும் என்றால் பஞ்சாங்கத்தில் ப்ரீத்தி , விருத்தி , சிவம் ஆகிய மூன்று நாம யோகம் இருக்கும் தருணத்திலும் கிம்ஸ்த்துகனம் எனும் கரணம் நடைபெறும் தருணத்திலும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் மீது குலதெய்வம் கொண்டிருக்கும் கோபம் குறைந்து, மறைந்து, மகிழ்ச்சி அடைந்து, ஆசி வழங்கும்.

அதன் பிறகு உங்களுடைய தொழிலில் மீண்டும் உத்வேகம் பெற்று, வளர்ச்சி அடைந்து, மகிழ்ச்சி அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.

குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளும் நாளில் குறைந்த பட்சம் உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற அளவில் அன்னதானம் வழங்குவது கூடுதல் பலனை வழங்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய வாழ்வியல் பரிகாரம்...?

2024-10-09 17:13:33
news-image

திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான சூட்சமமான வழிபாடு...!!?

2024-10-08 17:13:01
news-image

இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய...

2024-10-07 15:06:17
news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17