திருமண வாழ்விலிருந்து விலகுகிறார் நடிகர் ஜெயம் ரவி

Published By: Digital Desk 7

09 Sep, 2024 | 03:08 PM
image

நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக தனது  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி. என நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39
news-image

சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இரண்டாவது...

2025-03-22 17:06:22
news-image

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ' தி...

2025-03-22 17:01:19
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட '...

2025-03-22 17:01:08
news-image

பேய் கொட்டு - திரைப்பட விமர்சனம்

2025-03-22 16:56:06
news-image

அதர்வா நடிக்கும் ' இதயம் முரளி'...

2025-03-22 16:55:46
news-image

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த எம்புரான்...

2025-03-22 16:36:17
news-image

நடிகர் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாழ்நாள்...

2025-03-22 12:02:21
news-image

ட்ராமா - திரைப்பட விமர்சனம்

2025-03-21 15:57:47
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட் ' திரைப்படத்தின்...

2025-03-21 15:57:33