(நெவில் அன்தனி)
அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர்.
சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது.
முதலாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3 - 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் இருவரும் சம நிலையில் இருந்தனர். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் தனதாக்கிக்கொண்ட சின்னர் முதல் செட்டில் 6 - 3 என வெற்றிபெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டிலும் இருவரும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் தரவரிசையில் முதல் நிலை வீரரான சின்னர் 6 - 4 என வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னலையில் இருந்தார்.
மூன்றாவது செட்டில் யார் வெற்றிபெறுவார் என்று கூறமுடியாத அளவுக்கு இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சமநிலை முறிப்புவரை நீடித்த மூன்றவாது செட்டில் சின்னர் 7 - 5 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டதாக கடந்த மார்ச் மாதத்தில் இரண்டு தடவைகள் நேர்மறையான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியான நிலையில், சின்னர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டு 19 தினங்களில் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்க பகிரங்க டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனான முதலாவது இத்தாலி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சின்னர் நிலைநாட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM