(நெவில் அன்தனி)
ஸ்பெய்ன் தேசத்தின் பொன்டிவேட்ரா அரங்கில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் நெத்மி அஹின்சா பெர்னாண்டோ இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி, உலக மல்யுத்த சம்பியன்ஷிப்பில் 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் நடுநிலையாளர் மிக்கிட்சிச் என்பவரை 6 - 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வெண்கலப் பதக்கத்தை தனதாக்கி வரலாறு படைத்தார்.
உலக மல்யுத்த சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
'என்னை விட பலசாலியான சீன வீராங்கனை ஜின் ஸங் என்பவருக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் சரிசமமாக நான் போட்டியிட்டேன். ஒரு கட்டத்தில் புள்ளிகள் நிலை 2 - 2 என சமநிலையில் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரிடம் தோல்வி அடைந்தேன்.
'மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் நடுநிலையாளர் வெலேரியா மிக்கிட்சிச்சை 6 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தேன்' என நாடு திரும்பிய நெத்மி குறிப்பிட்டார்.
தகுதிகாண் சுற்றில் கஸக்ஸ்தான் வீராங்கனை யெங்லிக் கபில்பெக்கை 10 - 0 என்ற புள்ளிகள் அடிப்படையியும் கால் இறுதிச் சுற்றில் பல்கேரிய வீராங்கனை நிக்கல் க்ராசிமிரோவா க்ருமோவாவை 10 - 0 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் நெத்மி இலகுவாக வெற்றி பெற்றிருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஹங்கேரி வீராங்கனை லிலியானா கப்புவாரிக்கு எதிரான கால் இறுதிச் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய நெத்மி 14 - 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.
அரை இறுதியில் தோல்வி அடைந்ததை அடுத்து மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பங்குபற்றிய நெத்மி, வெண்கலப் பதக்கத்தை வென்று இரணடு வருட இடைவெளியில் தனது இரண்டாவது சர்வதேச பதக்கத்தை வென்றெடுத்தார்.
நெத்மிக்கு சுரங்க குமார பயிற்சி அளித்து வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM