எய்ட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ் (Aitken Spence Hotels) ஆனது விருந்தோம்பல் துறையில் 50 ஆண்டுகாலமாக முன்னணியில் திகழ்வதை பெருமையுடன் கொண்டாடுகிறது. 1974 ஆம் ஆண்டில் நெப்டியூன் ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டது தொடக்கம் , இந்நிறுவனமானது நீடித்து நிலைக்கும் தன்மை,தரம் மற்றும் புதுமைக்கான அதன் அர்ப்பணிப்புக்காக உலகளாவிய ரீதியில்புகழ் பெற்று திகழ்கிறது.
எய்ட்கன் ஸ்பென்ஸ் ஆனது பல தசாப்தங்களாக, இலங்கைக்கு அப்பால் தனது சர்வதேச இருப்பினை விஸ்தரித்துள்ளது, இதற்கிணங்க மாலைத்தீவுகள், ஓமன் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் புதிய தரத்தில் தனது சிறந்த விருந்தோம்பல் சேவையை வழங்கும் இலங்கையைச் சிறந்த ஒரே ஹோட்டல் சங்கிலியாக தனித்தன்மையுடன் மிளிர்ந்து வருகிறது.
ஆரம்பத்தில் நெப்டியூன் ஹோட்டல் என்ற பெயருடன் இயங்கி வந்த நிலையில் பின்னர் எய்ட்கன் ஸ்பென்ஸ் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் 1994 ஆம் ஆண்டில் மாலைத்தீவில் உள்ள பத்தலா ஐலண்ட் ரிசார்ட்டை கையகப்படுத்தியதன் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்த முதல் இலங்கை விருந்தோம்பல் நிறுவனமாக எய்ட்கன் ஸ்பென்ஸ் விரைவாக வரலாற்றைப் பதிவு செய்தது.
இந்த முன்னோடி நிலை தொடர்ந்த நிலையில் நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் ஓமானிலும், 2016 ஆம் ஆண்டில் இந்தியாவிலும், 2017 ஆம் ஆண்டில் RIU ஹோட்டல்ஸ் ஸ்பெயினுடன் ஒரு வெற்றிகரமான ஒத்துழைப்பினை மேற்கொண்டதன் மூலம் தனது சேவையை விஸ்தரித்தது. பல்வேறு சவால்களிலும் மத்தியிலும் அவற்றை எதிர்நோக்கி விருந்தோம்பல் துறையில் எய்ட்கன் ஸ்பென்ஸ் ஆனது முன்னணி ஸ்தானத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.
இன்று, எய்ட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ் ஆனது இலங்கை, மாலைத்தீவு, ஓமான் மற்றும் இந்தியா முழுவதும் மொத்தம் 2,629 அறைகளுடன் 18 ஹோட்டல்களை நிர்வகித்து வருகிறது.முன்னோடி வர்த்தக நாமமாக , ஹெரிடன்ஸ் ஹோட்டல் & ரிசார்ட்ஸ், புகழ்பெற்ற ஜெஃப்ரி பாவாவால் வடிவமைக்கப்பட்ட மூன்று ஆதனங்களுடன் , அதன் கட்டடக்கலையில் சிறந்து விளங்குகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், ஹெரிடன்ஸ் கண்டலமா, அமெரிக்காவிற்கு வெளியே LEED சான்றிதழ் பெற்ற முதல் ஹோட்டலாகவும், தெற்காசியாவில் முதல் பசுமை உலக (Green Globe) சான்றிதழ் பெற்ற ஹோட்டலாகவும் திகழ்கிறது .வடிவமைப்பு, இயற்கை மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மை ஆகியவற்றை ஒருங்கே கொண்டமைந்த எய்ட்கன் ஸ்பென்ஸின் புதுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில், உலகளவில் அதிக விருது பெற்ற ஹோட்டல்களில் ஒன்றாக இது விளங்குகிறது .
எய்ட்கன் ஸ்பென்ஸின் செயல்பாடுகளில்நிலைத்து நீடிக்கும் தன்மையானது மிகவும் பிரதானமான அம்சமாகும். செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கும் ஹெரிடன்ஸ் கண்டலமாவில் 211 ஏக்கர் பாதுகாப்பு காடுகளை நிர்வகிப்பது முதல் மா லைத்தீவில் உள்ள அனைத்து ரிசார்ட்டுகளிலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பது வரை, நிறுவனம் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான அதன் உறுதிப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
இந்த முயற்சிகள் தொழில்துறையின் பிரதானமான அம்சமாக திகழும் நிலைபேற்றுத்தன்மையில் எய்ட்கன் ஸ்பென்ஸின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது.மேலதிகமாக , ஹெரிடன்ஸ் கண்டலமா மற்றும் ஹெரிடன்ஸ் அஹுங்கல்லாவில் உள்ள ஹோட்டல் பாடசாலைகள் மூலம் திறமைகளை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது, இது எதிர்கால சந்ததியினர் விருந்தோம்பல் துறையில் தொழில் வல்லுநர்களாக மிளிர்வதற்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.
எய்ட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ் ஆனது அதன் 50 ஆண்டு கால பயணத்தில் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது, இவ்வேளை , இந்த மைல்கல் ஆனது ஊழியர்களை ஊக்குவிக்கவும், விருந்தோம்பலின் எதிர்காலத்தில் புதுமைகளுடன் கூடிய கவனத்தை செலுத்தவும் ஊக்கமளிக்கிறது.
"இந்த மைல்கல்லை எட்டியுள்ள இத்தருணம் மிகவும் பெருமையினை அளிக்கிறது என" எய்ட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இணை பிரதித்தலைவியும் இணை முகாமைத்துவப் பணிப்பாளருமான ஸ்டாஷானி ஜெயவர்தன, தெரிவித்தார். "இது எங்கள் சாதனைகளின் புதுமைமிகு கொண்டாட்டமாகும்., இத்தருணமானது நிலைபேற்றுத்தன்மை மற்றும் சமூக நலனுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
எங்களின் விவேகமுள்ள விருந்தினர்கள், அர்ப்பணிப்புள்ள பங்குதாரர்கள் மற்றும் கௌரவமிக்க விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பிற்காக நாங்கள் பெரிதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உங்கள் பங்களிப்பு எங்கள் பயணத்தை வடிவமைத்துள்ளது; மேலும் இந்தப் பயணத்தை தொடர்வதற்கும், எங்களின் நேர்மறையான செல்வாக்கை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும்அழியாத நினைவுகள் மற்றும் விதிவிலக்கான அனுபவங்களை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட காத்திருக்கிறோம்."
இந்த 50வது ஆண்டு நிறைவானது எய்ட்கன்ஸ்பென்ஸின் முன்னோடி மனப்பான்மைக்கு ஒரு சான்றாக மட்டுமல்லாமல், நிறுவனம் விருந்தோம்பலின் எதிர்காலத்திற்கு மேலும் திறம்பட சேவையாற்றுவதற்கு ஊழியர்களை மீண்டும் உற்சாகப்படுத்துவதற்கான ஒரு தருணமுமாகும். வலுவான தலைமைத்துவம், அர்ப்பணிப்பான சேவையை வழங்கும் குழுக்கள் மற்றும் நீண்டகால பங்குடைமை ஆகியவை நிறுவனத்தின் வெற்றிக்கு துணை புரிந்துள்ளதுடன் மேலும் சுருங்கக்கூறின் விருந்தோம்பலின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், நிலைபேறான சுற்றுலாவை அபிவிருத்தி செய்யவும் , உலகம் முழுவதும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும் எய்ட்கன்ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ் தயாராக உள்ளது.
எய்ட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ் பற்றி;
எய்ட்கன் ஸ்பென்ஸ் ஹோட்டல்ஸ் இலங்கை, மாலைத்தீவு , ஓமன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள 18 ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளின் பல்வேறு வகையான வர்த்தகநாமங்களின் குழுமமாக திகழ்வதுடன் இதன் பல்வேறுபட்ட வர்த்தக நாமங்களான ஹெரிடன்ஸ் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ், ஆதாரன் ரிசார்ட்ஸ் மற்றும் துரியா ஆகியவற்றின் ஊடாக மேற்பார்வை செய்கிறது. இலங்கையில் பாவா வடிவமைத்த ஹோட்டல்களின் மிகப்பெரிய தொகுதியின் பாதுகாவலராக உள்ளதுடன் அது வழங்கும் செழுமையான சலுகைகளுக்கு கட்டிடக்கலை மேலும் உன்னதத்தை அளிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM