கொழும்பில் இருந்து ஹைலெவல் வீதி ஊடாக கொட்டாவை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கொட்டாவை பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய இளைஞனொருவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து ஹைலெவல் வீதி ஊடாக கொட்டாவை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென வீதியில் சறுக்கிச் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயங்களுடன் மீண்டும் எழ முற்பட்ட போது, பின்னால் வந்த ஜீப் வாகனமொன்றில் மோதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, விபத்தினை ஏற்படுத்திய ஜீப்வாகனத்தின் சாரதி அப்பகுதியைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM